இலங்கையில் ரமழான் பிறை தென்பட்டது - நாளை புனித நோன்பு ஆரம்பம்
ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டின் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று (20) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதனால் நாளை சனிக்கிழமை அதிகாலை முதல் நோன்பு நோற்குமாறு இலங்கையில் வாழும்
முஸ்லிம்களை கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உத்தியோபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
வழமை போலவே இவ்வருடமும் ரமழான் நோன்பு உலகளாவிய ரீதியில்
ReplyDeleteஆரம்பமான வெள்ளிக்கிழமை தினமே இலங்கையிலும் குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையான முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பித்து விட்டனர்.
நாடுகள், மற்றும் அவற்றின் எல்லைகள் என்பது அரசாங்கங்கள் தத்தமது
ஆதிக்க, ஆட்சித் தேவைகளுக்காக பிரித்துக் கொண்டது ஆகும்.
உலகளாவிய முஸ்லிம்கள் ஒரே உம்மத் ஆகும்.
மனிதனால் பிரிக்கப் பட்ட நாட்டின் எல்லைகள், முஸ்லிம்கள் ரமழானை
அடைவதனை தடுக்கவோ, தாமதப் படுத்தவோ முடியாது.
ரமழானின் ஹிலாலை (தலைப் பிறையை) பற்றிய சாட்சி கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில்
வெள்ளிக்கிழமை முதல் நோன்பை இலங்கையிலும் முஸ்லிமகளில் குறிப்பிடத் தக்க
எண்ணிக்கையானவர்கள் ஆரம்பித்துள்ளனர்.