காத்தான்குடி பிரதேச 'வேட்பாளர் அறிமுக' நிகழ்வு
எப்.எம்.பர்ஹான்
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காத்தான்குடி பிரதேச வேட்பாளர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ஷிப்லி அவர்களை அறிமுகப் படுத்தும் 'வேட்பாளர் அறிமுக' நிகழ்வு நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம் அஸ்பர் தலைமையில் இடம் பெற்றது.
இந்த 'வேட்பாளர் அறிமுக' நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் 'சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்' காத்தான்குடி பிரதேச வேட்பாளர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ஷிப்லி'முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம் பரீட்' காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம் அஸ்பர் 'பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பிராந்திய காரியாலய செயலாளர் பாரூக் ஹாஜி 'பிரதி நகர முதல்வர் ஜெஸீம்'நகர சபை உறுப்பினர் பாக்கீர் 'மட்டக்களப்பு முஸ்லிம் வர்தக சங்கத் தலைவர் கலீல் ஹாஜியார் 'ஊடகவியாளாலர் ரி.எல்.ஜவ்பர்கான் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment