முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினால் அச்சப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
அரசு செய்வது எல்லாமே சரியென்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் தீர்மானம், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் விரோதமான தீர்மானமாகும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென உலகுக் காட்டவுமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அரசு பயன்படுத்த முனைந்துள்ளது.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாம் செயற்படவில்லை என்று இந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மூலம் காட்டலாமென ஜனாதிபதி நப்பாசை கொண்டுள்ளார். இதனால் முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் தெளிவாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையிலுள்ளோம். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இடம் பெறும் அரசின் அட்டூழியங்கள் , அநீதிகளைச் சீர் தூக்கிப் பார்த்து, அரசுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அரசு செய்வது எல்லாமே சரியென்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் தீர்மானம், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் விரோதமான தீர்மானமாகும். உலகத்தை ஏமாற்றுவதற்கு அரசுக்குக் கொடுக்கும் சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை மழுங்கடிக்கச் செய்வதற்கென அரசு இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணைபோகப் போகின்றது என்று தான் நாம் அச்சப்படுகின்றோம்.
ஆனால் இந்த வஞ்சகத்தை அறிந்து கொண்ட முஸ்லிம் மக்கள், முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளேயே போராடியிருக்கின்றனர். முஸ்லிம் மக்களுடைய இன அடையாளங்களை அழித்து விடுவதற்கும், நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அரசை ஆதரித்து நிற்பது எவ்வளவு தவறானது என்பதைத் தெரிந்து கொண்ட முஸ்லிம் மக்கள் இன்று கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இக் குரலை, முஸ்லிம் காங்கிரஸ் செய்தது தவறு என்று கூறும் மக்களுடைய குரலாக நாம் தெளிவாக அறிந்து வரவேற்கின்றோம்.
நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோமென்பதல்ல, இதற்கு எதிராக இருக்கும் அரசை எதிர்க்க வேண்டும். தமிழ், மக்கள் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அரசியல் உரிமையைப் பெற்று ஆளும் உரிமையைப் பெற வேண்டும். இதற்கு இத் தேர்தல் சிறந்த சந்தர்ப்பமாகும்.
சிறுபான்மையினங்களான தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக, இராணுவ, மதபேரினவாத ஆட்சி நடத்தும் அரசின் கொட்டத்தை அடக்கவும் இந்தத் தேர்தல் முடிவுகள் பயன்படும்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசு பக்கம் சார்ந்தாலும் அதற்கு எதிராக இருக்கின்ற முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிப்போமெனச் சொல்வதன் மூலம் வருகின்ற தேர்தலில், தீர்ப்பை வழங்க அவர்கள் முன்வருகின்ற போது அது உலகத்திற்கு எடுத்துக் சொல்லக் கூடிய சிறந்த தருணமாக அமையும் என்றார்.

Summa poongewa.. LTTE yin agend aana neengkal em musleem inaththukku ilaiththa turokamum kodumayum maddiladagkaathu,
ReplyDeleteUngkal LTTE paarththa velayaalthaan ippo musleemkal giraamankalayum pallikalayum vayalkalayum ilakkinraarkal neengkal solli nadakka naankal enne vannithth thamilanaa?
நினப்புத்தான் புலப்ப கெடுக்குமாம் நீங்க வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் செய்ததே இல்லை!!! இன்னும் ஒரு துரும்பைகூட முஸ்லிம்களுக்காக அகற்ற தயாராக இல்லை!!! ஆனால் முஸ்லிம்கள் மட்டும் உங்களுக்கு ஆதரவு தர வேண்டுமாம் ஆமா முஸ்லிம்கள என்ன கேன கிருக்குகள் என்ட நினப்பா உங்களுக்கு???
ReplyDelete