Header Ads



முஸ்லிம் அரசியல்வாதி தொடர்பில் மனோ கணேசனின் வேதனை..!


சமீபத்தில் கண்ணதாசன் நினைவு நாள் நிகழ்வில் நான் தெரிவித்த சில கருத்துகளை, சில கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் நண்பர்கள் வேண்டும் என்றே திரித்து புரிந்துகொள்ள முயன்றுள்ளார்கள்.

முஸ்லிம் சகோதரர்கள் தங்களை தனி ஒரு இனமாக அறிவித்துக்கொண்ட போது அதை கைதட்டி வரவேற்றவன், நான்.

முஸ்லிம் மக்களை, 'இஸ்லாமிய தமிழர்கள்' என்று சொல்லி 'தமிழின' அடையாளத்துக்குள் அடைத்து வைக்க சில 'தமிழ் தீவிரர்கள்' முயன்றதை நாடாளுமன்றத்திலேயே நிராகரித்தவன், நான்.

முஸ்லிம் தேசிய இனத்துக்கு சுய நிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை நான் எப்போதும் ஏற்றுகொண்டவன்.

போர் உக்கிரமாக நடந்த கால கட்டத்தில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ' போருக்கு எதிரான தேசிய முன்னணி'யில் நானும் முன்னோடியாக இருந்தேன். புலிகளால், முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து அடாத்தாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து, இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்களின் உரிமை கோரிக்கைகளையும், போருக்கு எதிரான தேசிய முன்னணியின் கொள்கை கோஷத்தில் உள்ளடக்க நானும், நண்பன் ரவிராஜும் முன்னின்று உழைத்தோம்.

இது எமது வரலாறு.

இந்த வரலாறுபற்றி எதுவும் தெரியாத அரசுடன் இணைந்துகொண்டுள்ள ஒரு கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதி, 'மலையகத்தில் பிறந்த' மனோ கணேசனுக்கு வடக்கு-கிழக்கு தமிழ்-முஸ்லிம் தேசியம் பற்றி என்ன தெரியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

இன்று, என்னை வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும், மேற்கிலும், தெற்கிலும் வாழும் எல்லா தமிழ்-முஸ்லிம் மக்களுக்கும் தெரியும். எனக்கு புதிதாக அறிமுகம் தேவை இல்லை. ஏனென்றால் இந்நாட்டின் ஒடுக்கப்படும் எல்லா தேசியங்களுக்காகவும் நான் குரல் கொடுத்து போராடி வருகிறேன். இந்த தகைமை இன்னும் எத்தனை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டில் இன்று இருக்கின்றது என இந்த நபர் தேடி பார்க்க வேண்டும்.

இவர்கள் தமது கட்சி, இனத்துக்குள்ளேயே பிரதேசவாதம் பேசுபவர்கள். எனவே பிரதேசவாதம் பேசும் இத்தகைய நபர்களை பற்றி நான் அலட்டி கொள்வதில்லை. இவர்களை எல்லாம்வல்ல அல்லா பார்த்துகொள்வார்.

முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடுங்கள் என்று நான் சொன்னதுதான், இவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.

இனவாதத்திற்கு எதிராக போராடுங்கள் என்று சொன்னால், கடந்த காலங்களில் முஸ்லிம் இளைஞர்கள் 'ஈழ விடுதலை' போராட்ட இயக்கங்களில் இணைந்து போராடினார்கள் என்று பதில் சொல்கிறார்.

நான் ஈழ விடுதலை போராட்டத்தை பற்றி சொல்லவில்லை.

இன்றைய நிகழ்கால அடக்குமுறைக்கு எதிராக போராடுங்கள் என்றுதான் சொல்கிறேன். முஸ்லிம் மக்களின் காணிகள் கவரப்படுவதை எதிர்த்து போராடுங்கள் என்றுதான் சொல்கிறேன். நாடு முழுவதும் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து போராடுங்கள் என்றுதான் சொல்கிறேன். நீங்கள் போராடாவிட்டால், புதிய தலைமுறை முஸ்லிம் தலைமை தோன்றும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்றும் சொன்னேன்.

இலங்கை தொடர்பில் உலகம் விழித்துக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உணர்வுடன் போராடி, உரிமையுடன் தீர்வில் பங்கு பெறுங்கள் என்றுதான் சொன்னேன்.

(எனக்கு எதிராக தப்பு, தப்பாக பேசியுள்ள இந்த அம்பாறை மாவட்ட அரசியல்வாதி குறைந்தபட்சம், சுனாமியில் வீடுகளை இழந்த முஸ்லிம் மக்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை, அந்த வீடுகளுக்கு உரித்துடைய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு பெற்று தர வேண்டும். இவர் இருக்கும் அரசாங்கத்தின் இனவாத பிரிவினரே அந்த வீடுகள் முஸ்லிம் சகோதரர்களுக்கு கிடைப்பதை தடுத்து வைத்துள்ளார்கள் என்ற உண்மை இவருக்கு மறந்து விட்டது. ஆனாலும் வீடுகளை இழந்து இன்னலுறும் ஏழை மக்களுக்கு இந்த அநீதி நினைவில் நிற்கிறது என நினைக்கிறேன். திருமதி பேரியல் அஷ்ரப் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட அந்த வீடுகளை முஸ்லிம் மக்களுக்காக சவுதி அராபிய அரசாங்கம் கட்டி தந்தது என எண்ணுகிறேன்)

2 comments:

  1. நீங்கள் கொஞ்சம் உங்க அந்த பேச்ச மீட்டி பாறுங்க போராட சொன்நீர்களா அல்லது தமிழர்களுடன் சேந்து அவர்களின் போராட்டதில் பங்கு கொள்ள சொன்நீர்களா??? உங்களுக்கு வந்த கண்டனமெல்லாம் தமிழரின் போராடத்தில் பங்கு கொள்ளாமல் தீர்வில் மட்டும் பங்கு கேட்கும் முஸ்லிம்கள் என்ற குற்ற சாட்டுக்கான கண்டனங்கள் அல்லவா அதனை ஏன் திசை திருப்ப பாக்கிறீர்கள் உலகம் என்ன இருண்டிடும் நீங்க கண்ண மூடினா என்ற நினப்பா???

    ReplyDelete
  2. ஐயா மனோகணேசன் அவர்களை நீங்கள் சொன்ன கருத்தில எந்த குற்றமும் இல்லை ஐயா உங்களை போன்று எங்கள் முஸ்லிம் அரசியவாதிகள் இல்லை ஐயா எங்கள் முஸ்லிம் அரசியவதில் ஒரு சில பேர் இன்னும் பணகாட்டு நரிகல்ல்தான் இருக்கைகள் ஒருத்தர் நல்ல கருத்தை சொன்னால் புடிக்காது ஐயா தயவு செய்து நீங்கள் மனம் நோக வேண்டாம் உங்கள் பேச்சு ஆற்றல் எனக்கு ரொம்ப புடிக்கும் ஒரு தைர்யம் உடைய அரசியவாதி ஐயா நீங்கா அரசியலில் இது எல்லா சஜம்தனே ஐயா கிழக்கு மண்ணில் இருந்து ரஹீம் ......!

    ReplyDelete

Powered by Blogger.