ஒற்றுமைப்பட வேண்டிய முஸ்லிம் தலைமைகளும், தீர்க்கப்படாத தம்புள்ளை விவகாரமும்..!
ரிஸ்வான் பின் அப்துல் காதர்
எமது நாட்டை உலுக்கிக் கொண்டிருந்த 20 வருடகால கொடிய யுத்தம் முடிவுக்கு வந்ததையிட்டு முஸ்லிம் சமூகம் பெரும் மகிழ்ச்சி அடைந்தது. நாட்டின் தற்போதைய நிலவரங்களை பார்க்கும் போது அம்மகிழ்ச்சியானது இனிவரும் காலங்களிலும் தொடரும் என்று உறுதியாக கூறமுடியாது.
ஏனெனில் இனவாத வெறிபிடித்த சிலர் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளார்கள் என்பதை அண்மைகால நிகழ்வுகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். எமது சோந்த காணிகளில் கைவைக்க ஆரம்பித்த அவர்கள் இன்று சுதந்திரமாக செயப்படும் மதவழிபாடுகளிலும், மதஸ்தாபனங்கள் மீதும் கை வைக்கும் அளவுக்கு இனவாத வெறி அவர்களை ஆட்கொண்டிருக்கின்றது. இன்று களத்தில் பேசும் பொருளாக உலாவரும் ஒரு விடயம்தான் தம்புள்ளை விவகாரமாகும். நடந்துமுடிந்த அக்கொடிய சம்பவத்தை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும். தவிரவும் இது விடயத்தில் அரசாங்கம் இதுவரைக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நீதியான ஓர் தீர்வை பெற்றுதராமல் இருப்பதானது அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகங்களை உருவாக்கி இருப்பதுடன் மக்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்துள்ளது என்று தாராளமாக கூறமுடியும். முஸ்லிம் உம்மாவுக்கு எதிராக இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஒன்றும் புதிதானவையல்ல. மாறாக அன்று தொட்டு இன்று வரை பழகிப் போன ஒன்றுதான்.
ஆனாலும் இப்படியான பிரச்சினைகள் இனிமேல் நம் சமுதாயத்திக்கு எதிராக வந்தால் அதனை எதிர்கொள்ளும் பலம் முஸ்லிம்களிடத்தில் உண்டா? அல்லது இலங்கை பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைகளை எதிர்கொள்ளும் சாணக்கியத்தோடு உள்ளார்களா? அல்லது அதை எதிர்கொள்வதற்காக ஏதாவது திட்டங்கள் அவர்களிடத்தில் உள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் தம்புள்ளை விடயத்தில் அவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் செயற்பட்டாலும் கூட இன்றுவரை அதற்கான ஓர் தீர்வை பெற்றுத் தராமல் இருப்பதானது முஸ்லிம்கள் மனதில் அவர்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் இன்றுவரை அதற்கான முழுமூச்சுடன் செயற்படுபவர்களும் உள்ளார்கள் என்பதையும் மக்கள் மறப்பதற்கில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் இலங்கையின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தோம் என்பதை இங்கு அனைவருக்கும் ஒருமுறை ஞாபகப்படுத்திகொள்ள விரும்புகின்றேன். அப்படியென்றால் இன்று ஏன் எங்களுக்கெதிரான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றோம். ஏனெனில் இன்று நம்முடைய ஆன்மீக, அரசியல் தலைவர்களிடத்தில் இல்லாமல் இருக்கும் ஒற்றுமையே அதற்கான பிரதானமான காரணமாகும்.
இந்த ஒற்றுமையானது ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் அடிப்படையில் இருந்தே வரவேண்டிய ஒன்றாகும். அல்லாஹ் இதுபற்றி குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். நீங்கள் அனைவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வின் (வேதமாகிய ஒற்றுமையேனும்) கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் (உங்களுக்கு கருத்து வேறுபாடுகளை உண்டு பண்ணி) பிரிந்துவிடாதீர்கள். எனவே தான் இந்த ஒற்றுமையானது குறிப்பாக மேற்சோன்ன நம் தலைவர்களிடத்தில் இல்லாமல் இருப்பது அனைவராலும் பெரும் குறையாகவே பார்க்கப்படுகின்றது. இன்றைய நம்முடைய தலைவர்கள் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைபட்டு முஸ்லிம்களுக்கு வரும் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதை விட்டுவிட்டு சிறுபிள்ளை தனமாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பதையும், ஏசிப் பேசுவதையும் இன்னும் இதுபோன்ற விடயங்களிலும் ஈடுபடுவதையும் தான் இன்று பரவலாக காண முடிகின்றது.
இன்னும் ஒருபடி மேலாக எமது முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலை திட்டங்களையும் எமது தலைமைகள் முடுக்கிவிட்டுள்ளார்கள் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. இப்படியான அபிவிருத்தி பணிகளை செவதற்கு ஒவ்வொருவரும் தனது சோந்த செல்வாக்கினை பயன்படுத்துகிறார்கள். ஆனால் எமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அந்த செல்வாக்கின் மூலம் அதனை முழுமையாக பெறமுடியாது அனைவரும் ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமைப்படுவதன் மூலமே அதனை கௌரவமாகவும், உரிய முறையிலும் பெறமுடியும் என்பது எமது கடந்தகால வரலாறாகும். எனவே தான் முஸ்லிம்களாகிய நாங்கள் இன்று உங்களிடம் வினயமாக ஒரு விடயத்தை சோல்லிக்கொள்ள விரும்புகின்றோம். நாங்கள் ஒருபோதும் அபிவிருத்தியை மாத்திரம் விரும்பவில்லை. அதற்கு மாற்றமாக உரிமையுடன் கலந்த அபிவிருத்தியை நாம் எதிர்பார்க்கின்றோம்.
10 அபிவிருத்தி பணிகள் செவதன் மூலம் எமது ஒரு உரிமை பரிச்சயப்படுமென்றால் அப்படியொரு அபிவிருத்தியின் பக்கம் நமக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. அதனை ஆரோக்கியமான எந்தவொரு சமுதாயமும் விரும்பவும் மாட்டாது. உதாரணமாக தம்புள்ள பள்ளிவாசலை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வேறொரு இடத்தில் பல அடுக்கு மாடிகளாக கட்டித்தருகிறோம் என்றால் அப்படியொரு அபிவிருத்தியை நாம் மாத்திரமல்ல ஈமான் உள்ள எந்தவொரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது யதார்த்தமான உண்மையாகும்.
இந்த இலங்கை திருநாட்டில் சிறுபான்மை சமுதாயமாக வாழும் நாங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் எங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமைபடுவதே இன்று தேவையான விடயமாகும். முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் விருப்புவெறுப்புகளையும் நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் இந்த மாபெரும் ஆசையை நிறைவேற்றும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாந்த நாள் வெகு விரைவில் எமக்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம். இறுதியாக இங்கே ஒரு நற்செதியையும், இறை வசனத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
‘நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்புகளை பற்றி (மறுமையில்) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்’ (அல் - ஹதீஸ்) ‘அந்த நாளில் (மறுமையில்) அவர்களின் வாகள் மீது நாங்கள் முத்திரை குத்தி (பூட்டுபோட்டு) விடுவோம். இன்னும் அவர்கள் சம்பாதித்த (செத) ஒன்றை பற்றி அவர்களின் கைகள் எங்களிடத்தில் பேசும் இன்னும் அவர்களின் கால்கள் எங்களிடத்தில் சாட்சி சோல்லும்’ (அல் - குர்ஆன்)
Post a Comment