முஸ்லிம் சமூகத்திற்கு கேத்தபய ராஜபக்ஸவின் வாக்குறுதிகள்..!
தகவல் உதவி - என்.எம்.அமீன்
புனித நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நோன்பின் சமயக் கிரியைகளை மேற்கொள்வதற்கு பூரண பாதுகாப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உறுதியாக தெரிவித்தார்.
கடந்தாண்டு புனித நோன்பு காலத்தில் இடம் பெற்ற கிரிஸ் மனிதர் பிரசன்னம்
போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதிருப்பதனை உறுதி செய்வதற்காக முஸ்லிம்கள் வாழும் சகல பிரதேசங்களுக்கும் பூரண பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்புச் செயலாளர் பணிப்புரை வழங்கினார்.
போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதிருப்பதனை உறுதி செய்வதற்காக முஸ்லிம்கள் வாழும் சகல பிரதேசங்களுக்கும் பூரண பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்புச் செயலாளர் பணிப்புரை வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டிலே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பான பணிப்புரைகளை வழங்கினார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மகாநாட்டில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகளுடன் கண்டி யூ.சி. என்.சி. அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாணசபை உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பிμதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் பிμச்சினைகள் பற்றி எடுத்து விளக்கினார். சில வெப்தளங்களிடாக முஸ்லிம்களுக்கெதி மேற்கொண்டுவரும் பிரச்சாரங்கள் பற்றி விளக்கிய அவர் புனித கஃபதுல்லாவைக் கூட அந்தரங்க உறுப்புக்களுடன் சமப்படுத்தும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
நோன்பு காலத்தில் வழமை போன்று இரவு நேர வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வீடுகளையும் மற்றும் பொது இடங்களையும் பயன்படுத்துவதற்கு எவ்வித தடையுமில்லை எனச்சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர் அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்படுவது பற்றி தகவல்கள் கிடைத்தால் உடன் பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அல்லது நேரடியாக பொலிஸ் மா அதிபரது கவனத்துக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.
பள்ளிவாசல்களை இலக்கு வைத்துசில சக்திகள் இயங்குவதனால் நோன்பு காலத்தில் இuவுநேu வழிபாடுகளுக்கு வீடுகளை அல்லது பொது இடங்களைப் பயன்படுத்தும் போது பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என மகாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், சட்டத்தuணி நத்வி பஹாவுதீன் ஆகியோர் சுட்டிக் காட்டினர்.
சமயக் கடமைகளை நிறைவேற்றுவது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் அதற்கு எவரலும் தடைபோட முடியாதென்றும் தேவை ஏற்படின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதற்கு பொலிஸார் எப்போதும் தயார் என்றும் பொலிஸ் மாஅதிபர் இலங்ககோன் இம்மகாநாட்டில் தெரிவித்தார்.
30 வருட யுத்தத்திற்கு முற்றுப் புள்ளிவைத்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு சகல சமூகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்காகத் தியாகங்களைச் செய்வதற்கும் சகல சமூகத்தவர்களும் முன்வர வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கு பெரும்பான்மை பௌத்தர்கள் எதிர்ப்பு இல்லை என்றும் கூறினார்.
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா பேசுகையில், நோன்பு காலத்தில் கடந்தாண்டு போன்று அசம்பாவிதங்கள் ஏற்படுவதனை தடுப்பதற்காகவே இக்கூட்டத்தைக் கூட்டியதாக கூறினார்.
புதிதாகப் பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கு நாட்டில் சட்ட ரீதியாக எவ்வித தடையுமில்லை எனத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் சில வெப்தளங்கள் கூறுவது போன்று வடக்கில் புதிதாக பௌத்த ஆலயங்கள் எதனையும் நிரமாணிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்துக் கோயிலுக்கருகே ஒரு பௌத்த ஆலயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இங்குகூட பௌத்த ஆலயம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கவில்லை. அதனை புதைப் பொருளாகப் பாதுகாக்க மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறுபணிப்புiu வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப இன நல்லிணக்க கமிட்டிகளை பிரதேச செயலாளர் பிரிவுதோறும் அமைப்பது அவசியம் என முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதியான எம்.எச். எம். நியாஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன், எம்.எச்.எம். தஹ்லான்,அக்குறணை பிரதேச சபையின் தலைவர் சிம்சான், மாவனல்லை பிரதேச சபையின் பதில் தலைவர் காமில், சட்டத்தரணி நத்வி பஹாவுதீன், உட்பட பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, பௌத்த சமய விவகார அமைச்சின் செயலாளர் டி.எம்.டி. திசாநாயக்கா, சிரஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
நீங்கள் பாதுகாப்பு வழங்காவிட்டாலும் பரவாயில்லை,
ReplyDeleteகிரீஸ் படையணியினரை அனுப்பாமல் விட்டாலே போதும்.