முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டி - பட்டியல் தயாரிப்பு மும்முரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளது. இதனை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மரம் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுர் பீடம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 12 வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட அனுமதி கோரப்பட்டது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 10 வேட்பாளர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. இதனால், கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
Vetriyo,dholviyo Muslim inatthin thanitthuvam padukaakkappadduviddathu
ReplyDelete