முஸ்லிம் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர் - மாவை சேனாதிராஜா எம்.பி.
தமிழ் மக்கள் தோல்வி கண்டவர்கள் என்ற சித்தாந்தத்துடன், அரசு வஞ்சக நோக்குடனேயே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்றது. எனவே இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்களாகிய நாம் ஒன்றுபட்ட செய்தியை, உரிமைக்கான நம் போராட்டத்தை வெளிக்காட்டும் நல்ல செய்தியைச் சர்வதேசத்துக்குச் சொல்வோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார். கல்முனையில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
"அரசு திட்டமிட்ட முறையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனிடமிருந்து எழுத்து மூலம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, இன்னும் ஒரு வருட காலம் இருந்தும் மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்தவிருக்கின்றது. நாட்டில் பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மை இனங்களைச் சீர்குலைத்து விடுவதற்கும் இச் சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பிரச்சினைகளே இல்லை, இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லையென சர்வதேசத்துக்குக் காட்டவும் இந்த மாகாணசபைத் தேர்தலை அரசு நடத்துகின்றது.
எனவேதான் சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மிக விழிப்புடன் இந்தத் தேர்தலை அணுக வேண்டிய அவசியமுள்ளது. இதே பேரினவாத அரசு நம் சகோதர இனமான முஸ்லிம் மக்களையும் நசுக்கி அவர்களுக்கும் அநீதி இழைத்து வருகின்றது. தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் எதிர்நோக்கி வரும் நில ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, திட்டமிட்ட குடியேற்றம் போன்ற ஒடுக்குமுறைகள், முஸ்லிம் மக்கள் மீதும் திணிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில்தான் வஞ்சக நோக்குடன் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நம்முன் வந்துள்ளது.''
இந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்ற தமது உள்ளத்துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தேர்தல் எப்படி முடியுமென்பது வேறு, ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசு பக்கம் போய் இந்தத் தேர்தலில் அரசை ஆதரித்தால் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதாக மட்டுமல்ல முஸ்லிம் மக்களையும் பலவீனப்படுத்துவதாகவே அது அமையும்.
முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். முஸ்லிம் மக்கள் இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசை ஆதரித்தால், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென்ற கருத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார்.

SLMC அரசுடன் சேர்ந்து கேட்பதை நாங்களும் ஆதரிக்கவில்லை ஆனால் எதிர்கவில்லை. ஆனாலும், உங்களின் ஆதங்கத்துக்கு பின்வருமாறு விமர்சிக்கின்றோம்;
ReplyDelete1. நீங்கள் புலிப்பலத்துடன் இருந்தபோது முஸ்லிம் சமூகத்தை எழ்ழிநடை செய்தீர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.
2. உங்கழுக்கு பக்க பலமாக அப்போது இருந்த ஆயுத பலம் தற்போது இல்லை என்பதாலும், தற்து ஒன்றுக்கும் முடியவில்லையே என்ற சூழலிலும் முஸ்லிம்களின் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக அவசியப்படுகின்றது. இதுதான் உண்மை எதார்த்தம்.
3. முதலில், தமிழ் பேசும் சமூகம் என்ற சொற் பதத்திலிருந்து இன்னும் ஒரு படி நீங்கள் முன்னேற வேண்டும். அதுதான் தமிழ் முஸ்லிம் என்ற சொற்பதம். நீங்கள் இதை இப்படி தாரள மனதுடன் சொல்ல, பேச உங்களுக்கு பக்குவமில்லை என்றால் உங்களின் முஸ்லிம்கள் மீதான அதரவுத்தன்மை போலியானது என்றே கருதுகிறோம். ஏனெனில், நீங்கள் சொல்லும் தமிழ் சமூகம் என்பது உங்கள் கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தால் உங்கள் சமூகத்துக்கு மட்டும் என்றே உங்கலால் அங்கிகரிக்கப்பட்ட சொற்பதம். அதில் அந்த 30 வருடத்தில் முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கவே இல்லை என்பதுதான் நதர்சனம்.
4. இவற்றுக்கெல்லாம் முளுச்சாயம் பூசிவிட்டு, நாங்கள் முஸ்லிம் சமூகத்தையும் சேர்த்துத்தான் போராடுகின்றோம் என்று உதட்டளவில் சொல்லி ஏமாற்ற முடியாது அய்யா...... அத்தோடு இன்னும் 30 வருடங்கள் சென்றாலும் தமிழ் சமூகத்துக்கு உங்களால் விமோசனம் கிடைக்காது. ஏனனில், தமிழ் சமூகம் என்ற கோட்பாட்டுக்குள், உங்கள் தமிழ் சமூகத்தையே, நீங்கள் ஒற்றுமை படுத்துவதில் தோல்வி கண்ட நீங்கள்.
இன்னும் சொல்ல நிறைய உண்டு, நீங்கள் நிஜமாக திருந்த நிறைய உண்டு....
ஆடு நலையுது என்ரு ஓனாய் அலுவுது, முஸ்லிம்கள் கொந்தாளித்துக்கொண்டு இருகிரார்கள் தமிழ் கூட்டமைப்பின் இறட்டை நிலப்பாட்டை நினய்து...
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்தியாக இருக்கமுடியுமே தவிர உங்களுடன் சேர்ந்து தனது தலையில் மண்ணை வாரிப்போடும் சக்தியாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை ஐயா.
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் தனித்து தேர்தலில் களம் இறங்கி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்போம், அனாலும் கட்சி இன்னும் ஒரு பாரிய பிளவை சந்திக்ககூடும் என்கிற அச்சத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவையும் ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.
அதேநேரம் எமதுசமூகத்தில் உள்ள சில பச்சோந்திகளால் எமது தனித்துவத்தை பேண முடியவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கத்தான் செய்கிறது..