Header Ads



'கற்றுக்கொண்ட பாடங்களும் தாய்நாட்டின் எதிர் காலமும்'

கண்டியிலிருந்து மொஹமட் ஹபீஸ்

 'கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக் ஆணைக்ழுவும்' அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துவன் மூலம் அல்லது சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஒன்றினூடாகவே இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தவர் எம்.ஏ. சமந்திரன் தெரிவித்தார்.

(11.7.2012) கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டத்தில் இடம் பெற்ற 'கற்றுக் கொண்ட பாடங்களும் தாய்நாட்டின் எதிர் காலமும்' என்ற தலைப்பில் இடம் பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

முனனாள் பிரதமர் எஸ்.ப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1930ம் ஆண்டு மலை நாட்டு ஆணைக் குழு முன் சாட்சியம் அளிக்கும் போது இலங்கைக்கு சமஷ்டி முறையிலான ஆட்சியே பொருத்தம் என்றார். அக்காலப் பகுதியிலே அது வழங்கப்பட்டிருக்குமாயின் இன்றைய நிலை வேறு விதமாக அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.

நல்லிணக் ஆணைக்குழுவை ஜனாதிபதியே நியமித்தார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாகவும் அரசு ஜெனீவாவில் ஒத்துக் கொண்டது. ஆனால் இலங்கை ஊடகங்களில் அதில் ஒரு சில விடயங்களை மட்டுமே வழங்க உள்ளதாகவும் பொய்யான தகவலைத் தெரிவித்தது.

அது மட்டுமல்ல. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஜனாதிபதியிடடம கையளித்து ஏழு மாதங்களான போதும் அதன் தமிழ் சிங்கள் மொழி பெயர்ப்பு இன்னும வழங்கப்படவில்லை. அதன் ஒரு சில பகுதிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி அறிக்கை தயாரிக்க முன் ஆணைக்குழுவை நிறுவிய போது மனித உரிமை மீறல் தொடாபாக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்ட்டதாக கூறப்பட்டது.  ஆதன்பின் மேற்படி அறிக்கை கிடைத்ததும் பதிலளிக்கும் கடற் பாடு தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் அது வரை சற்று பொறுமை காக்கவும் எனக் கூறப்பட்டது.

ஆனால் ஐ.நா.சபை தீர்மானம் நிறைவேற்றியதும் அதனை அமுல்படுத்துவதாகக் கூறிய போதும் அதன் மொழி பெயர்ப்புக் கூடக் கிடைக்க வில்லை. காரணம் அதை இயன்றளவு இழுத்தடிக்க முயற்சிக்கிறது.

அதுமட்டுமல்ல இவ்அறிக்கை வாசிப்போரைத் திசை திருப்பும் விதத்தில் பல்வேறு சொற் பிரயோகங்கள் உள்ளன. இதற்கு முன் பல ஆணைக்குழுக்கள் தெரிவத்த சிபாரிசுகளின அடிப்படையிலே இதன் சிபாரிசுகளும் அமைந்துள்ளன. இது ஒரு குறிப்பிட்ட அட்வணையின் படி தயாரிக்கப்பட்ட அறிக்கையே தவிர சுயமான தேடல்கள் இல்லை. அதுமட்டுமல்ல பல தசாப்தங்களுக்கு முன் விதைந்துரைக்கப்பட்டவை வழமை போன்றே இதிலும் உள்ளன.

கால்நடைகளை இடத்திற்கிடம் கொண்டு வெல்லும் நடைமுறையை அரசு தளர்த்தியது. ஆதற்கென விசேட வாகன அமைப்பு முறையையும் கால் நடை அபிவிருதிதி அமைச்சு விதைந்துரை செய்யதது. இப்பொழுத வன்னி மக்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? ஏமக்குச் சொந்தமான கால் நடைகளைக் கூட எம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியாது. அவை தினம் தினம் நூற்றுக்கணக்கில் தெற்கு நோக்கி கொண்டு வரப்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து

பிழையை பிழை என்று கூறும் திராணி பொதுமக்களிடம் ஏற்படாத வரை இவ் அரசு மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்களை நிறுத்த முடியாது என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து தெரிவித்தார்.

கலாநிதி நிமல்கா பெர்னான்டோ

இவ்வைபவத்தில் உரையாற்றிய கலாநிதி நிமல்கா பெர்னான்டோ தெரிவித்ததாவது- கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அரச ஊடகங்களே முக்கியத்துவம் வழங்கி அதனை பிரபலம் அடையச் செய்தன. இன்று நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தொடாபான அனைத்து அழுத்தங்களுக்கும் அதன் பிரபலமே காரணமாகிறது. ஜனாதிபதி அதனை வாசிக்கும் புகைப்படம் ஒன்றைப் பத்திரிகையில் பார்த்ததும் அதனை வாசிக்க வேண்டுமென்று நானும் தூண்டப்பட்டேன். பின்பு அதனை வாசித்து முடித்தேன். நூட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவது, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற  பிரிவுகளை வாசித்த போது நான் மேலும்ஊக்கு விக்கப்பட்டேன்.  நூறு பொய்கள் கூறும் போது அதில் குறைந்தது ஒரு உண்மையையாவது சேர்க்கவேண்டு மென்பார்கள். அது இங்கு உண்மையாகியுள்ளதைக் காணமுடிந்தது. அதனடிப்படையில் காணமற் போனோரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினேன்.

பிள்ளைகள் கடத்தப்படும் போது ஒரு தாயால் மௌனியாக இருக்க முடியாது. எனது தாய்நாட்டின் மனித உரிமைகள் தொடாபான நற் பெயர் கெட்டு விட்டது. எனவே கற்றுக் கொண்டபாடங்கள் குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த குரல் கொடுக்கவேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல. ஜெனீவா தீhமானம், மேற்படி ஆணைக்குழு அறிக்கை என்பவற்றின் சுருக்கம் மூன்றே முன்று அடிப்படைகளைக் கொணடது. இறைமையையும் அதிகாரத்தையும கொண்டு ஆட்கடத்தல் மற்றும் கொலை போன்ற விடயங்கள் மறைக்கப் படுவதும் பதிலளிக்கும் கடற்பாடு பற்றியதும் அது எத்தகைய வேலைத்திட்டம் என்பவைகளே அந்த மூன்று விடயங்களாகும்.

எனவே இவ்வியங்கள் தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல்கொடுக்க வேண்டி வந்தது. இதனால் அரசிற்கு சஞ்சலம் ஏற்பட்டிருக்கலாம். ஆதனால் எனது கைகால்களை உடைப்பதாக ஒரு அமைச்சர் கூறியிருந்தார். இதனால் எப்போது வெள்ளை வேன் வரும் என நான் வழி பார்க்கவேண்டியுள்ளது.

ஆனால் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது. எனவே எதை நான் ஏற்றுக் கொண்டுள்ளேனோ அதை விடயத்தை ஜெனீவா சென்று ஒத்துக் கொண்ட மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரின் காலைத்தான் எனக்கு முன் உடைக்கவேண்டி வரும் என்றார். பாராளுமன்ற அங்கத்தவர் அக்கில விராஜ் காரிய வசம், ஜனநாயக சோசலிஸ முனனணியின் தலைவர் சிரிதுங்க ஜயசூரிய உற்பட இன்னும் பலர் உரையாற்றினர்.





 

No comments

Powered by Blogger.