முஸ்லிம் காங்கிரஸ் சவால் விடுமளவு பெரும் சக்தியல்ல - பிள்ளையான்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கின்ற,சவால் விடுகின்ற, பெரும் சக்தியாக வருமளவுக்கு தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அமையாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடுகின்றது. எங்களுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இவற்றில் கணிசமான ஆசனத்தை வெற்றிகொள்ளமுடியும்.
மட்டக்களப்பில் 6 பேரும் அம்பாறையில் 3 பேரும், திருகோணமலையில் 3 பேரும் போட்டியிடுகின்றோம். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 5 ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் அதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் பெற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களைப் பெறும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும்.
அந்த வகையில் எங்களது கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெறும். அவ்வாறு பெற்றால் எமக்கே முதலமைச்சர் பதவியை அரசாங்கம் தரும்.கடந்த மாகாண சபையின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.
அடுத்த மாகாண சபையின் ஐந்தாண்டுகளிலே எங்களது கிழக்கு மாகாணத்திலே உயர்ந்த கல்வி வளர்ச்சி அதே போன்று எமது மாகாணத்திலே 43,000குடிசைகளையும் தகரத்திலான வீடுகளையும் முழுமையாக கல் வீடுகளாக பூர்த்தி செய்தல், உற்பத்தித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துதல், சுற்றுலாத்துறையை அதிகாரிகள் தனியார் முதலீட்டை ஊக்குவித்தல், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். தேசத்துக்கான மகுடம் திட்டத்தின் கீழ் எமது மாகாண மக்களுக்கான உட்கட்டுமான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
எமது மாகாண மக்கள் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக நலிவடைந்த மக்கள் என்ற வகையில் எமது மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், உட்கட்டுமான வேலைகளை வழங்குதல் அது மட்டுமல்லாமல் அதிகாரப் பகிர்வு ரீதியாக மாகாண சபையை வலுவாக்குதல் போன்ற விடயங்களை எமது கட்சி முன்நின்று செய்து கொடுக்கும். அதற்கு முன்னராக இந்த தேர்தலில் வெற்றி பெறுவது காலத்தின் தேவையாகும். இதற்கு தமிழ் மக்களின் உதவி கட்டாயத் தேவையாகவும் உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போதிருக்கும் தேசிய அரசியல் மாகாண அரசியலை பொறுத்தவரைக்கும் அவர்கள் வெற்றிபெற்ற பின்னரும் அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் போக்கையே கைக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளும் இல்லை. இருந்தாலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற, சவால் விடுகின்ற அளவுக்கு பெரும் சக்தியாக தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அமையும் என்று நிச்சயமாகக் கூறமுடியாது.
கடந்தமுறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாவிட்டாலும்கூட ஏனைய கட்சிகளின் பின்புலத்திலிருந்து ஆதரவு தெரிவித்திருந்தது. இருந்தாலும் அவர்களுடைய சின்னத்தில் இம்முறை போட்டியிடுவதென்பது தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கான சந்தர்ப்பமாக இருந்தாலும் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த மக்களுக்கு அபிவிருத்தி எதனையும் பெற்றுக்கொடுக்காது.
அந்த அடிப்படையில் உரிமை விடயத்திலும் சரி மக்களின் தேவை விடயத்திலும் சரி முன்னின்று உழைக்கும் கட்சி என்பதை உணர்த்தியிருக்கும் அடிப்படையிலே அவர்களைத் தாண்டி அதிகமான வாக்குகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது.
கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நிச்சயம் வெற்றிபெறும்.இங்கு தேசிய ரீதியான கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அதேபோன்று முஸ்லிம்,தமிழ் மக்களிடையே ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியாக தமிழரசுக்கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக அது சவாலாக இருந்திருக்கலாம். அவை தனித்தனியாக பிரிந்துசென்றுள்ளதென்பது ஆளும்கட்சியின் வெற்றியை அதிகமாக்கியுள்ளதென்றும் தெரிவித்தார்.

Post a Comment