Header Ads



மாணவர் விசா கட்டுப்பாட்டை நீக்குமாறு பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை .

பிரிட்டனில் கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்குமாறு அந்நாட்டின் வர்த்தக சமூகத்தினர் பிரதமர் டேவிட் கமரூனை கோரியுள்ளனர்.

 வளரும் நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்காக பிரிட்டனுக்கு வருகின்றனர்.

 இந்த வெளிநாட்டு மாணவர்களை ஆண்டுக்கு ஒரு இலட்சம் பேருக்கு மேல் அனுமதிப்பதில்லை என்று பிரிட்டன் அரசு சமீபத்தில் முடிவு செய்தது.

இது குறித்து அந்நாட்டின் 37 பெரிய வர்த்தகர்கள் பிரதமர் டேவிட் கமரூனுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அவர்களில் கோப்ரா பீர் நிறுவன உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கரண் பிலிமோரியாவும் ஒருவராவார்.

 தி சன்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் உலகெங்கிலும் இருந்து சிறந்த மனங்களை( மாணவர்களை) ஈர்க்க வேண்டிய அவசியம் இங்கிலாந்துக்குள்ளது.

உண்மையான ஆர்வம் மிக்க மாணவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள் என்ற தெளிவான செய்தியை நாம் அனுப்ப வேண்டியது  அவசியம்.நாட்டின் வர்த்தக வளர்ச்சியில் அவர்களுக்கும் பங்கு உள்ளது.

 எனவே அவர்களின் எதிர்காலச் சேவை நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 அப்பத்திரிகையின் தலையங்கத்தில் உலகெங்கும் உள்ள சிறந்த புத்திசாலித்தனமான மாணவர்களை ஈர்க்கும் காந்தமாக நமது பல்கலைக்கழகங்கள் விளங்கி வருகின்றன.

 அவர்களது திறமைகள், நமது பல்கலைக்கழகங்களை அறிவுபூர்வமாக செழுமைப்படுத்துகின்றன. அவர்கள் செலுத்தும் கட்டணம், பல்வேறு உயர்கல்வி நிலையங்களுக்கு இக்கட்டான நேரங்களில் பெரும் உதவியாக உள்ளது.

 எனவே வெளிநாட்டு மாணவர்களின் வருகை தொடர்பான விசா கட்டுப்பாடுகளை அரசு நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நல்ல செய்தியாக அமையட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.