வெற்றிலைக்கு தமிழர்கள் வாக்களித்தால் முஸ்லிம்களே தெரிவு செய்யப்படுவார்களாம்..!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவோருக்கு வாக்களித்தால் அது அக்கட்சியிலுள்ள ஐந்து முஸ்லிம்களைத் தெரிவு செய்வதற்கு தாரைவார்த்துக் கொடுக்கும் வாக்காகவே அமையுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சந்திவெளி புதுப் பிள்ளையார் கோவில் முன்றிலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் கல்குடா தொகுதி வேட்பாளர் கிருஷ்ண பிள்ளை சேயோன் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
முதலமைச்சரைப் பெறுவது என்பது ஒரு விடயம், தமிழர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது மறு விடயம். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் உள்ளார்கள் என்ற செய்தியை நாங்கள் சர்வதேசத்திற்கு காட்டுவதன் மூலம் தான் இராஜதந்திர ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தில் நாங்கள் வெற்றியடைய முடியும்.
தமிழ் மக்கள் அரசாங்கத்தின் வெற்றிலைக் கட்சியில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இடுகின்ற புள்ளடியும் ஐந்து முஸ்லிம்களை தாரைவார்த்துக் கொடுப்பதாக அமையும். வாக்குச் சீட்டில் பெரும்பாலும் முதல் இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களின் பெயர்களே காணப்படும். அரசாங்கத்தின் வெற்றிலைக் கட்சிக்கு வாக்களித்து முஸ்லிம்களை தெரிவு செய்வதா? அல்லது தமிழர்கள் மட்டும் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழனைத் தெரிவு செய்வதா? என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க முடியும் என்றார்.
முஸ்லிம்களும் தமிழர்களே என்று சொன்னதன் அர்த்தம் புரிகின்றதா?
ReplyDeleteபுலி வால்கள் மெல்ல எட்டிப் பார்க்கின்றன.
இவர்கள் கையில் மாகாண காணி, போலிஸ் அதிகாரங்கள் கிடைத்தால்
இவர்களுக்கிடையே பெரிய சர்ச்சையே உருவாகும்.........
எதில் சர்ச்சை உருவாகும் தெரியுமா?
முஸ்லிம்களை இரண்டு மணி நேரத்தில் வெறும் கையுடன் வெளியேற்றுவதா, அல்லது பள்ளிவாசல்களுக்குள் போட்டு சுட்டுக் கொல்லுவதா என்பதில்தான் சர்ச்சை உருவாகும்.
இவர்களை ஒரு பொழுதுமே நம்பி ஏமாந்து விடாதீர்கள் முஸ்லிம்களே.