போலி நாணயம் அச்சிடும் உபகரணம், ஆபாச வீடியோவுடன் கைதான தேரருக்கு விளக்க மறியல்
மொஹமட் ஹபீஸ்
குருநாகல் வெல்லவ பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் தமது ஆசிரமத்தை வைத்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர் வரும் 19ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி பௌத்த வழிபாட்டுத்தளத்தில் நடத்தப்பட்டு வந்த கணனி பயிற்சிக் கூடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று கணனிகளில் போலி 500 மற்றும் 1000ரூபா தால்களை அச்சிடுவதற்கான தயார் நிலையில் இருந்துள்ளன. சாரதி அனுமதிப்பத்திரமும் ஆபாச வீடியோக்கள் மற்றும் மூன்று பெயர்களுடனான அடையாள அட்டை என்பவற்றைப் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
Post a Comment