கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரிக்கு புதிய மூன்று மாடி கட்டிடம் (படங்கள்)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் புதிய மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
சுமார் 150 இலட்சம் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (14) கல்லூரி அதிபர் கே.எம்.நாளிர் தலைமையில் கல்லூரி வளவில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கலந்து கொண்டு கட்டிடத்திற்கான நினைவுப் படிகத்தை திறந்தும் கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், அர்ஷாத் மற்றும் பழைய மாணவர்கள் பிரதேசவாசிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கல்லூரியில் நீண்ட கால பிரச்சினையாக இருந்துவந்த இடவசதி குறைபாடானது புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதும் தீர்க்கப்பட்டுவிடுமென நம்பப்படுகிறது.
Post a Comment