இஸ்ரேலுக்கு எதிராக போட்டியிடாவிட்டால் தண்டனை
ஒலிம்பிக் போட்டியின் போது இஸ்ரேல் வீரர்களுக்கெதிராக விளையாட மறுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்களென்று சர்வதேச ஒலிம்பிக் சபைத் (ஐ.ஓ.சி.) தலைவர் ஜக்ஸ் ரோஜ் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரர்களுக்கெதிராக விளையாடாமல் புறக்கணிப்போம் என்று எகிப்து மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவதது,
ஒரு வீரருக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவோ, காயமோ ஏற்படுமானால் அது ஏற்கத்தக்கது. யாராவது போட்டியிலிருந்து விலகினால் அவர்களுக்கு சுதந்திரமான மருத்துவக் குழுவைக் கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்துவோம் . அப்போது அவர்களுக்கு உடல்நலக்குறைவு இல்லாத நிலையில், தவறான தகவல் அளித்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு நாட்டு வீரருக்கு எதிராக விளையாட முடியாதென்றுகூறி மற்றொரு நாட்டைச் சேர்ந்த வீரர் விலகுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அனைத்து நாடுகளின் ஒலிம்பிக் சபைக்கும் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம் என்றார்.
2004 இல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியின் போது இஸ்ரேல் வீரர் இகுட் வக்ஸுடன் மோத நேர்ந்த போது ஈரான் வீரர் அராஸ் மிரேஸ்மெயில் விலகினார். ஆனால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏதும் இல்லை. வேண்டுமென்றே போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்பது பின்னாளில் தெரியவந்தது.
ஒலிம்பிக்கில் சர்வாதிகாரமா?
ReplyDeleteமுஸ்லிம்களை கொலை செய்யும் சட்ட விரோத நாடான
இஸ்ரவேலை புறக்கணிக்க உரிமை கிடையாதா?
இஸ்ரவேல் மட்டுமல்ல, மியன்மார், சிரியா, ஈரான் என்பவற்றையும்
முஸ்லிம் வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்.
இத சமாளிக்கிறது பெரிய விசயமா எங்கள் வீரர்களுக்கு தங்கள் கைகளை தாங்களே வெட்டி ஜீவன் இழந்து போட்டியில் இருந்து ஒதுங்குவர் அல்லது ஏதாவது விபதிட்குள்ளாகி போட்டில் இருந்து ஒதுங்குவர் ரோஷம் உள்ள முஸ்லிம் யூதனோடு தங்க மை அளித்தாளும் விளையாடான்
ReplyDelete