Header Ads



இந்த நாட்டுக்கு யார் சொந்தக்காரர் என்பது பிரச்சினையல்ல - மாதுளுவாவே சோபித்த தேரர்

இலங்கைக்கு முதலில் வந்தவர் விஜயன் அல்ல புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் கூடுகள் இதனை பொய்ப்பிதுள்ளது என்று  கோட்டே விஹாராதிபதி மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் இலங்கையில் முதலில் வந்தவர் விஜயன் என்ற கூற்றை 38,000 வருடங்களுக்கு முன் புளத்சிங்களையிலும் சப்ரகமுவையிலும் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு பொய்ப்பித்துள்ளது. எனவே இந்த நாட்டுக்கு யார் சொந்தக்காரர் என்பது பிரச்சினையல்ல இது இங்கு வாழும் அனைவருக்கும் சொந்தமான நாடு என அவர் தெரிவித்துள்ளார் .






1 comment:

  1. இலங்கைல் பூர்விகக் குடிகள் “வேடர்கள்” புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர்

    வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.