Header Ads



மஹிந்தவின் படத்தை வீடுகளில் வைத்திருங்கள் - காத்தான்குடியில் அமைச்சர் மேர்வின் சில்வா

V

கடல் என்பது சிங்களம் என்றோ முஸ்லிம் என்றோ தமிழ் என்றோ இல்லை. கடல் பொதுவானது. அதிலுள்ள மீனுக்கும் இன-மத பேதம் இல்லை. தமிழ் மாலு, முஸ்லிம் மாலு, சிங்கள மாலு என்றில்லை என மக்கள் தொடர்பு, மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

நேற்றிரவு காத்தான்குடி பாலமுனை தெற்கு மீரா கிராமிய கடற்றொழில் அமைப்பின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பேசுகின்ற போது சொன்னார், நான் அரசன் போன்று வேலை செய்கின்ற ஆளென்று. நான் வீரனுக்கு வீரன். அரசன் நீதியை நிலை நாட்டுவார். அதே நேரம் அந்த அரசன் வேலை செய்கின்ற ஆட்களை பொறுமையோடு வைத்திருப்பார். உங்களிடம் என்னுடைய நல்ல செய்திளைச் சொல்வதற்கு இன்று நான் இங்கு வந்திருக்கின்றேன்.

நான் தென் இலங்கையிலிருந்து கடற்கரையில் விளையாடி மீனவர்களோடு பழகி அங்கே இருக்கின்ற கிலவல்லா மீனைக் கையிலெடுத்து வந்து அவர்களுடைய சுக-துக்கத்தில் பழகிய நான் உங்களுக்கு அந்நியமானவன் அல்லன்.

மீனவர்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிந்தவன் நான். ஏனென்றால் எனக்கு முதல் முதல் கிடைத்த அமைச்சு கடற்றொழில் உதவி வீடமைப்பு அமைச்சர் நீங்கள் எல்லோரும் அறிய வேண்டும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு முதல் முதல் கிடைத்த பதவி கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர். எங்களுடைய அதிமேதகு ஜனாதிபதி பல்கலைக்கழகம், வேறு கல்லூரிகள,; நவீன தொழிநுட்பம் கொண்ட கடல் பயிற்சிகளை உருவாக்கினார்.

அதே போன்றுதான் கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் அவருடைய தம்பி மஹின் சேனாரத்னவும் இந்நாட்டில் கடற்றொழில் துறையை அதி உன்னத நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
நான் மக்கள் தொடர்பு, மக்கள் தொடர்பாடல் அமைச்சர். கடல் பிரச்சினை என்றாலும் மீனவர் பிரச்சினை என்றாலும் நாட்டுப் பிரச்சினை என்றாலும் என்னால் முடிந்தளவு கை கொடுப்பேன்.

என்னுடைய அமைச்சு எல்லாருக்கும் பொதுவானது. அது எல்லோருக்கும் பொருந்தும். நான் சகல வேலைகளையும் செய்யக் கூடியவன். நான் விளையாட்டு மைதானத்தையும் அமைப்பேன். பாதையைச் செப்பனிடுவேன். மக்களுக்கான அனைத்தையும் செய்வேன்.

நீங்கள் எல்லோரும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய படத்தை எவ்வித கட்சி பேதமின்றி உங்களுடைய இல்லங்களிலே வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் இந்தக் கிராமத்துக்கு ஒரு சேவையையும் நிவாரணத்தையும் வழங்கியுள்ளார்

No comments

Powered by Blogger.