பெற்றோர்களே பிள்ளைகளை அதிக துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குகின்றனர் - மனோதத்துவ வைத்திய நிபுனர் வீரசிரிவர்தன
இன்று வீடுகளை அதி பாதுகாப்பு வலயங்களாக மாற்றி பெற்றோர்களே பிள்ளைகளை கூடுதலாக துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்ககின்றனர் என்று மனோ தத்துவ வைத்திய நிபுனர் சமிந்த வீரசிரிவர்தன தெரிவித்தார்.
2012 - 07 - 12 ம் திகதி அக்குறணை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறு பிள்ளைகளை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது சம்பந்தமான கருத்தரங்கில் பிரதான சொற்பொழிவை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
இன்று பிள்ளைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதையிட்டே நாம் கூடுதலாக பேசுகின்றோம். ஆனாலும் கூடுதலான பிள்ளைகள் வீட்டிலேயே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். துஷ்பிரயோகம் என்பது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அல்ல. மனோ நிலை பதிப்பும் அடங்கும்.
இன்று பெற்றொர்களது நடத்தை பிள்ளைகளது மனோ நிலையை வெகுவாக பாதித்துள்ளது. பிள்ளைகள் படிக்க மாடட்hர்கள் என்று அவர்களை ஓயாமல் திட்டும் பெற்றோர்களை நாம் கான்கின்றோம். ஆனாலும் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி படிக்க முடியாது. அது அவர்களது அறிவின் அழவை கொண்டுள்ளது.
உலக மனோ வைத்தியர்கள் பிள்ளைகளின் அறிவுக் கூர்மையை பற்றி கனிப்பு செய்துள்ளனர். அதன் படி 130 க்கு மேற்பட்டவர்கள் அதி புத்தி சாலிகள் 70 க்கு குறைந்தவர்கள் புத்தி குறைவனவர்கள். 90-109 க்கும் இடபைபட்டவர்கள நடு நிலமை வகிப்பவர்கள்.
இன்று வீடுகளில் பெற்றோர்கள் சண்டை பிடிப்பதனாலும் பிள்ளைகளின் மன நிலை பாதிக்கப்படுகிரது. முதலில் பெற்றோர்கள் ஒருத்தரை ஒருத்தர் புறிந்து விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையுடன் வாழ வேண்டும் என்றும் அவர் இங்கு தெரிவ்த்தார்.
Post a Comment