Header Ads



அரசாங்கத்துடன் இணந்தது மு.கா. - புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்தாகும்..?


எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

புரிந்துர்ணர்வு உடன்படிக்கையின் மூலமாக  அரசுடன் இணைந்து கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பான அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை சனிக்கிழமை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்தாகும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

6 comments:

  1. இது எதிர் பார்த்ததுதான் தலைமை முடிவெடுத்த பின் மசூராசெய்யும் பழக்கத்தை கை விட வேண்டும் இஸ்லாமிய அமைப்பு என்று சொல்லி கொள்ளும் ஒரு கட்சிக்கு இது அழகில்லை மசூராவில் முடிவு ஏற்படாவிட்டால் தலைமை எடுக்கும் முடிவிற்கு சகலரும் கட்டு பட வேண்டும் இதுதான் இஸ்லாமிய முடிவாக இருக்கும்.தான் தோன்றி யாக நடந்த தலைமைகள் அழிந்த வரலாறுகளை நாம் கண்டுள்ளோம்.இந்த முடிவால் பெரிதாக பிரயோசனம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லை.இருக்கும் உரிமைகளையாவது பாது காக்க வேண்டும்.

    ReplyDelete
  2. மட்டகளப்பிலும் திருமலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நிறுத்தபடும் மூன்று வேட்பாளர்களுக்கு சமமாக விருப்பு வாக்குகளை அளித்தால் நிறுத்தபடும் மூன்று வேட்பாளர்களும் இரு மாவட்டங்களிலும் வெற்றி பெருவர் , அம்பாரையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இ பொத்துவில் தொகுதியினர் மூன்று வேட்பாளர்களுக்கும் சம்மாந்துறை தொகுதியினர் மூன்று வேட்பாளர்களுக்கும் கல்முனை மக்கள் இதில் ஒரு அணிக்கும் சாய்ந்த மருது ஆதரவாளர்கள் அடுத்த அணிக்கும் என அம்பாரை முஸ்லிம் காங்கிரஸின் 81,000 ஆதரவாளர்களும் இரு அணியாக பிரிந்து மூன்று மூன்று வேட்பாளர்களுக்கு சமமாக 40,000 வாக்குகளுக்கு மேல் வாகளிப்பின் ஆறு பிரதி நிதிகளும் தெறிவு செய்யபடுவது நிச்சயம் இப்படி வெற்றிகரமான வாக்களிப்புக்கு பிரதேச வாத சிந்தனை பேய் வாக்காளர்கள் மத்தியில் இருந்து அகல வேன்டும் அதட்குறிய பிரச்சாரத்தை கட்சி முன் எடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. இவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு நடைமுறைப் படுத்தும் என்பது கானல் நீர்.. பொறுத்திருந்து பாருங்கள் அரசு தனது தகிடு தாளங்களை தேர்தலுக்கு பின் அரங்கேற்ற போகிறது.. எல்லோரும் விழி பிதுங்கி நிற்க போகிறார்கள்.. தனியாகப் போட்டி இட்டு தேர்தலில் வென்று விட்டு ஒப்பந்தம் செய்து இருந்தால் அதற்கு ஒரு பெறுமதி இருந்திருக்கும்... இதற்குரிய பெறுமதியி வெகு விரைவில் அனுபவிப்பார்கள்..

    ReplyDelete
  4. இப்படித்தான் நடக்கும் என்று நம் மக்களுக்கு எப்போவே தெரிந்த விடயம். இதற்கு போய் அது இது என்று எப்படி ஒரு பம்மாத்து வீராப்பு பேச்சுக்கள்...... உங்களால் அரசை விட்டு எக்காலமும் பிரிய முடியாது.... எனவே, தற்போது 6 + 3 + 3 மட்டுமே உங்கள் உயர்மட்ட பேச்சில் முடிவானதா? உங்கள் CM Post பீரங்கி பேச்சு எங்கே ஐயா???? அரசுடனான உடன்படிக்கையை மக்கள்முன் உங்களால் வைக்க முடியுமா??? இன்னும், இம்முறையும் கிழக்கு முஸ்லிம் மக்களை நீங்கள் (SLMC) ஏமாற்றுவது 200% உறுதி....

    ReplyDelete
  5. பொராளிகலெ..... ஒப்பந்தம் என்னெ வெண்று கட்சி வெலிபடுத்தவேண்டும். இம்முரையும் நம்மை வெற்று வார்த்தயெகலால் ஏமாற்ற முடியாது.

    ReplyDelete
  6. மல்லிகை அபாபீல்...15/07/2012, 07:05

    முஸ்லிம் சமூக அரசியலை மறு சீரமைக்கும் தருணம் இது.. சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறி போய் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் இன்னும் பெரும் பான்மை வால் பிடித்து என்ன பலன்.. இந்த அரசியல் வாதிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. நாட்டில் பிரச்சினை என்றால் வெளிநாட்டில் சென்று தஞ்சம் பெற்று விடுவார்கள்.. சிந்தியுங்கள் சமூகத்தை.. சமூக நோக்கம் கொண்ட அரசியல் வாதிகள் அரசையும் இந்த அரச வால்களையும் தூக்கி எரிந்து விட்டு புதிய பாதையில் மக்களுக்காக அர்ப்பணம் செய்யுங்கள்.. மக்களே ஓய்வெடுக்க நேரமில்லை.. சமூகத்தின் கட்சி திசை மாறி பயணிக்கிறது.. புறப்படுங்கள் புரட்சி செய்வோம்... புத்திஜீவிகளே ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் நாளைய எமது சமூக அழிவுக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமானவர்கள்.. உரிமைகளை மீட்டு எடுப்போம் புறப்படுங்கள்..

    ReplyDelete

Powered by Blogger.