நான் வன்னியில் அரசியல் நடாத்துவதை றிசாத் பதியுதீன் விரும்பவில்லை - ஜே.ஸ்ரீரங்கா
அமைச்சர் ரிசாட் பதியூதீன் போன்ற ஆளும் கட்சிஅரசியல்வாதிகள் தாம் வன்னியில் அரசியல் நடத்துவதனை விரும்பவில்லை என பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் மக்களை பிழையாக வழிநடத்தி வருவதாகவும், சுயலாப நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் யதார்த்தமாக செயற்படுவதில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகளின் போது தமிழ் மக்கள் பிழையாக வழிநடத்தப்படக் கூடாது என்பதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவமானது அரசாங்க ஆதரவு கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரச அனுசரணையுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது அரசியல் வளர்ச்சி தொடர்பில் அச்சம்கொண்ட நபர்கள் , தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை எனவும், 18ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு மட்டுமே ஆதரவளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் ஊடாக ஈழக்கோரிக்கை முன்வைத்த சம்பந்தன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் எவரும் ஆயுத போராட்டத்திலோ அல்லது வேறும் போராட்டங்களிலோ பங்கேற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசியல் தலைவர்கள் மக்களை பகடைகாய்களாகப் பயன்படுத்தி தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். gtn

Nuvareliya makkalai eamaatri mudijjidhu vanni makkalai eamaatra purapiddaachu aduttha dherthalil entha katchiyei pidikka idea adutthadu veeddukkutaan
ReplyDelete