Header Ads



பிரிவதற்கு தயாரான பிஞ்சு மலர்களும், மஹிந்த ராஜபக்ஸவின் இளகிய மனமும்

TM

9 வயதான   தருஷா லக்ஷன் என்ற சிறுவன் தனது 2 வயதான ஒரேயொரு சகோதரியான சலனிகா கவிசா என்ற சிறுமிக்கு உணவு ஊட்டும் உணர்பூர்வமான காட்சியையே இந்தப்  படத்தில் காண்கின்றீர்கள்.

தனது சகோதரனின்  பாசத்தை 2 வாரத்திற்கு அவள் இழக்கவுள்ளாள் என்பதை அறியும் முதிர்ச்சி அவளுக்கு இல்லை.  நீதிமன்றம் இச்சிறார்களை வெவ்வேறு அநாதை விடுதிகளுக்கு  அனுப்புவதற்கு பணித்துள்ளது. 2 வாரங்களுக்கு பின் இவர்கள் மொனராகலையிலுள்ள எஸ்.ஓ.எஸ். கிராமத்தில் மீண்டும் இணையமுடியும்.

 இச்சிறார்களின் தந்தை சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அதேவேளை, தாயார் இறந்துள்ளார். இந்த நிலையில் இச்சிறார்களை பராமரிப்பதற்கு எவரும் இல்லாததால் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் இச்சிறார்களின் தாயார் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பாவிச் சிறுவர்கள் மீது விதி விளையாடத் தொடங்கியுள்ளது. இச்சிறார்களின் தந்தை எல்ல பகுதியில் இடம்பெற்ற தனது மனைவியின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் மாமியரைக் கொலைசெய்த குற்றத்திற்காக  சிறைத்தண்டனை அனுபவித்துவருகின்றார். இதனைத் தொடர்ந்து பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இச்சிறார்களில் சகோதரரை அம்பேகொட சிறுவர் அநாதை விடுதிக்கும் சகோதரியை பண்டாரவளை சுஜாதா சிறுவர் அநாதை விடுதிக்கும் தற்காலிகமாக அனுப்பிவைக்குமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



அநாதரவான சகோதரர் ஒருவரையும் சகோதாரி ஒருவரையும் இரு வெவ்வேறு அநாதை விடுதிகளுக்கு அனுப்பிவைக்கும் நீதிமன்ற உத்தரவு பற்றி டெய்லிமிரர் பத்திரிகையின் வாயிலாக அறிந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சட்ட மா அதிபருடன் தொடர்புகொண்டு மேற்படி சிறார்களின் விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

மேற்படி சிறார்களை ஒரே அநாதை விடுதியில் தங்கவைப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதற்கான நீதிமன்ற கட்டளையைப் பெற்றுக்கொள்ளுமாறும் சட்ட மா அதிபரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.