முஸ்லிம் காங்கிரஸில் உட்பூசல்? ஹக்கீம் ஒரு பக்கம்?? பஸீர் மறுபக்கம்???
இனாமுல்லாஹ் மஹ்சுதீன்
கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னுள்ள மூன்று தெரிவுகள்
(1 ) அரச கூட்டணியில் போட்டியிடல்,
(2) எதிர்க் கட்சி கூட்டணியில் போட்டியிடல்,
(3) தனித்துக் கேட்டு விட்டு பின்னர் பேரம் பேசுதல்.
அரசுடன் சேர்ந்து கேட்டால் பேரின மேலாண்மைக்கு துணை போதல் என்ற பழிச் சொல், எதிரணியுடன் (TNA ) கூட்டுச் சேர்ந்தால் பிரிவினைக்கு துணைபோதல் என்ற பழிச் சொல், தனி வழி சென்றால் கட்சி பிளவு படும் என்ற பயம்.
ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்வது குறித்து தற்போதைய நிலையில் சிந்திக்க முடியாத அரசிற்கான கடப்பாடுகள்.
எது எப்படிப் போயினும் உட்பூசல் காரணமாக தலைவர் ஒரு புறம், தவிசாளர் ஒரு புறமாக வியூகங்களை வகுப்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி தலைவரையும், அமைச்சர் பஸில் தவிசாளரையும் சாமர்த்தியமாக கையாள்வதாகவும் ஊடகங்களில் ஊகங்கள்.!
சமூகத்திற்கான வேலைத்திட்டம் வெல்லுமா இந்த தனி நபர்களின் வேலைத்திட்டங்கள் வென்று சமூகம் தோற்றுப் போகுமா? என்ற கேள்வியை கேட்டால் பதில் ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.
தீவிர அரசியலில் நாட்டம் இல்லாத போதும் அறபு வசந்தம் போன்று மாற்றத்தை விரும்பும் "கிழக்கின் வசந்தம்" ஒரு முற்போக்கு அணிக்கு எனது ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளேன்..!
Post a Comment