Header Ads



விண்டோஸ் 8 அக்டோபர் மாதம் வெளியாகிறது


புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.

இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.

ஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.