Header Ads



உடற்பயிற்சி செய்வதில்லை - வருடாந்தம் 50 இலட்சம் பேர் மரணம்


டிலான்செட் என்ற மருத்துவ பத்திரிக்கை ஒன்று உடற்பயிற்சி குறித்து ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில் நோய்களை விட உடற்பயிற்சி இல்லாமல் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் போதிய உடற்பயிற்சி இல்லாமல் மட்டும் 50 லட்சம் பேர் உயிரிழப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. சமீப ஆண்டுகளாகத்தான் மக்கள் உடற்பயிற்சியை அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. உடற்பயிற்சி செய்தால் இதயநோய், சர்க்கரை நோய், ஒருவகை புற்றுநோய் போன்றவற்றை 10 சதவீதம் குறைத்துவிடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்றவற்றை செய்தால் கூட அது உடலுக்கு போதுமான பயிற்சி அளிக்கும். வாரத்துக்கு 2 1/2 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் அது உடலுக்கு போதுமனாது என்றும் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

No comments

Powered by Blogger.