Header Ads



அமெரிக்காவில் ஒருவனுக்கு பைத்தியம் - 14 பேர் பலி, 50 பேர் காயம்



அமெரிக்க திரையரங்கில் திடீரென நுழைந்த மர்ம ஆசாமி, அங்கிருந்த பார்வையாளர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில், 14 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில், அரோரா என்ற இடத்தில் உள்ள திரையரங்கில், வவ்வால் மனிதனின் கதையை அடிப்படையாக கொண்ட, "தி டார்க் நைட் ரைசஸ்' என்ற படத்தின் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்டது. ஏராளமானவர்கள் திரையரங்கில் இருந்தனர்.

தியேட்டரின் அவசர வழி வழியாக நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன், புகையிலிருந்து பாதுகாக்கும் முக கவசத்தை அணிந்திருந்தான். உள்ளே நுழைந்த உடன் கண்ணீர் புகை குண்டை வீசினான். இதனால், திரையரங்கம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதை தொடர்ந்து அந்த நபர், கண்மூடித்தனமாக பார்வையாளர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில், 10 பேர் அங்கேயே இறந்தனர். நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார், 24 வயது நபரை கைது செய்துள்ளனர். இவன் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து, எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளார். "குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.