அமெரிக்காவில் அனல் காற்று - 42 பேர் பலி
அமெரிக்காவின் மிட்வெஸ்ற் முதல் கிழக்கு கரை வரையான பகுதிகளை தாக்கி வரும் கடுமையான அனல் காற்றினால் 42 பேர் பலியாகியுள்ளனர். அதிக வெப்பம் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளதுடன், வீதிகளும் ரயில் தண்டவாளங்களும் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக நூற்றுக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வெப்பமானது எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில் 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை சனிக்கிழமை பதிவாகின. வாஷிங்டனில் 40.5 ஸ்டெயின் லூயிஸில் 41 இன்டியான போலிஸில் 40, லூயிஸ் வில்லாவில் 40.5 பாகை செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இப்போது கோடை காலம் நிலவி வருகிறது. இந் நிலையில் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. வெப்பக் காற்று அதிகரிப்பு, மின்சாரம் இல்லாமை இரண்டும் ஒருங்கே அதிகரித்துள்ளதால் வயதானவர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழக்கின்றனர்.
மத்திய அட்லாண்டிக் பகுதியில் வசிக்கும் 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வாஷிங்டனில் மாகாணத்தில் உள்ள பெப்கோ நிறுவனம் மின் பற்றாக்குறை நீடித்து வருவதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment