Header Ads



காஷ்மீரில் நிலச்சரிவு - 400 பேர் சிக்கினர்



காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் சங்கலா பாஸ் என்ற இடத்தில் நேற்று திடீர் என்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 17,590 அடி உயரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்த இடம்.

நிலச்சரிவு ஏற்பட்டதும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் சிக்கிக் கொண்டனர். ஏராளமான வாகனங்களும் சிக்கிக்கொண்டது. மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினர் கடுமையாக போராடி நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் 400 பேரை மீட்டனர். 150 வாகனங்களும் மீட்கப்பட்டன. உயிர்ச்சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் இல்லை.

நிலச்சரிவில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இங்கு மிகப்பெரிய அருவி உள்ளது. சீனாவின் பாங்காங் ஏரியில் இருந்து இதற்கு தண்ணீர் வருகிறது. ஏரியின் 3-ல் ஒரு பகுதி இந்தியாவில் உள்ளது. மற்ற பகுதி சீனாவில் உள்ளது.
 


No comments

Powered by Blogger.