Header Ads



மட்டக்களப்பு திருமண வீட்டில் உணவு விஷமானது - 380 பேர் சுகயீனம்

உணவு விஷமடைந்ததால் சுகயீனமுற்ற 380ற்கும் மேற்பட்டவர்கள்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றை அடுத்து அவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றோற்றம் போன்ற நோய் அறிகுறிகளுடன் இன்று அதிகாலை முதல்  இவர்கள் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.