உப்புக்குள முஸ்லிம்கள் நீதிகேட்டு போராட்டம் - 3 பொலிஸார் காயம், 8 பேர் கைது
மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் இன்று புதன்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டபோது அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. மன்னார் நீதவானால் 16 மீனவர்களை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தடுத்துநிறுத்த முயன்றபோது, பொலிஸாரை நோக்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கற்களை வீசியுள்ளனர். இதனால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மன்னார் உப்புக்குள முஸ்லிம்கள் நேற்றும் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அவர்களுக்கு நியாயமான பதில் கிடைக்காத நிலையில் அவர்கள் இன்றும் மற்றுமொரு போராட்டத்தில் குதிக்க நேர்ந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment