Header Ads



சிரியாவில் ஆசாத்தின் கட்டுப்பாட்டில் 27 சித்திரவதை கூடங்கள்


சிரியாவின் புலானாய்வு பிரிவினரின் 27 சித்திரவதை நிலையங்களில் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நிலையங்களில் அதிகாரிகளால் ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தடிகள் மற்றும் கேபீள்கள் மூலம் அடித்தல், அமிலம் மூலம் எரித்தல், பாலியல் துஷ்பிரயோகம், கைவிரல் நகங்களை பிடுங்குதல் போன்ற துன்புறுத்தல்கள் அங்கு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பஷார் அல் அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் ஆரம்பித்ததை அடுத்து இந்த நிலையங்கள் இயங்கி வருவதாக கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

துன்புறுத்தலுக்கு இலக்கானதாக கூறப்படும் 200 க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.