Header Ads



பெண்கள் மாத்திரம் பணியாற்றும் தொலைக்காட்சி - எகிப்தில் 21 ஆம் திகதி ஆரம்பம்


எகிப்து நாட்டில், முழுக்க முழுக்க பெண்கள் பணியாற்றும், "டிவி' சேனல், வரும் ரம்ஜான் மாதத்தில், நிகழ்ச்சிகளை துவக்குகிறது.

எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் தலைமையிலான குடும்ப ஆட்சி, கடந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது. தற்போது, அங்கு ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முகமது முர்சி அதிபராகியுள்ளார்.

முபாரக் ஆட்சி காலத்தில், தளர்த்தப்பட்டிருந்த இஸ்லாமிய நடைமுறைகள், முர்சியின் ஆட்சியில் கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, வரும் 21ம் தேதி, ரம்ஜான் மாதம் துவங்குகிறது. இதையொட்டி, "மரியா' என்ற "டிவி' சேனல் கெய்ரோவில் துவக்கப்பட உள்ளது. இந்த "டிவி' சேனலில் விசேஷம் என்னவென்றால், முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயங்குவது தான். "டிவி' நிலைய இயக்குனர், கேமராவை இயக்குபவர், வர்ணனையாளர்கள், நிருபர்கள் என அனைத்து தரப்பினரும் பெண்கள் தான்.

இவர்கள் அனைவரும், பர்தா அணிந்து தான் பணிபுரிய உள்ளனர். முதல் கட்டமாக ஆறு மணி நேர ஒளிபரப்பு 21ம் தேதி துவங்குகிறது.

No comments

Powered by Blogger.