ஆப்கானிஸ்தானில் தீயில் கருகி 20 பேர் மரணம் - 180 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் தொழிற்பூங்கா ஒன்றில் கியாஸ் சேமிப்புக் கலன் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் தீயில் கருகி பலியாயினர். 180 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் கிழக்கே பகிட்டாகோட் என்ற பகுதியில் மிகப்பெரிய தொழில்ப்பூங்கா ஓன்று உள்ளது. இங்கு சிலிண்டரில் கியாஸ் நிரப்ப புரோப்பேன் எரிவாயு சேமிப்பு கலன் உள்ளது.
இதில் தீடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. காஹிர்கானா பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகட்டடம் சேதமடைந்தது. தொடர்ந்து தீ மளமள பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் லாரிகளுக்கும் தீ பரவியது. இந்த தீவிபத்தில் 20 பேர் பலியானதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்ததாகவும் அந்நாடடு டி.வி. சானல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்கசிவால் கியாஸ் சேமிப்பு கலனில் பரவியதில் வெடித்து சிதறியதே தீவிபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். தீயக்காயமடைந்த 180-பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Post a Comment