ருஹுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - 2 மாணவிகள் கைது
ருஹுணு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த மாணவி ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான இரண்டாம் ஆண்டு மாணவிகள் இருவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது கருத்து வெளியிட்ட மாத்தறை பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான உதேஷ் ரணதுங்க சந்தேகநபர்களான மாணவிகளுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம் சந்தேகநபர்களான இரண்டு மாணவிகளும் இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் கல்வியை இலவசமாக்கியது எல்லோரும் படிக்கணும் என்றுதானே! இதுங்க நாங்க ஜெயிலுக்கு போய் நாசமகபோறோம் என்று பிடிவாதமா இருக்குதுகளே...
ReplyDelete