1827 உருவாக்கப்பட்ட கரிமலை கிராமம் - அமைச்சர் றிசாத் விஜயம் (படங்கள் இணைப்பு)
திருகோணமலையிலிருந்து இர்ஷாத் றஹமத்துல்லா
திருகோணமலை மாவட்டத்தில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் வாழந்த கரிமலை ஊற்று கிராமத்தினை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
கிண்ணியா நகர சபை தலைவர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் விடுத்த வேண்டுகோளின் பேரில் தீரமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் இப்பகுதிக்கு சென்று தற்போதைய பிரதேசத்தின் நிலையினை கண்டறிந்து கொண்டார்.
1827 ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம் ஒருவரினால் இக்கிராமம் உருவாக்க்பட்டது. அதன் பின்னர் இங்கு முஸ்லிம்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலினால் இவ்விடயங்களை விட்டு மக்கள் வெளியுற நேரிட்டது.
மீண்டும் சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்னர் மீள்குடியேற இம்மக்கள் வந்த போது இந்த பிரதேசம் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதனால்,மக்கள் இங்கு மீள்குடியேற முடியாமல் போயுள்ளதாக இப்பிரதேச மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்த விடயங்களை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் இது குறித்து ஜனாதிபதி,மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாகவும் இங்கு கூறினார்.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,முன்னால் அமைச்சர் அமீர் அலி,எம்.எஸ்.சுபைர்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,அமைப்பாளர்களான அப்துல் ரஸ்ஸாக்,புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment