Header Ads



18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார் வெளிநாடு செல்வதற்கு தடை வருகிறது

வேலைவாய்ப்பு நிமித்தம் 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அவ்வாறான குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

சட்டம் வகுக்கப்படுவதற்கு முன்னர் சமூகத்தை தெளிவுபடுத்தி வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வேலைவாய்ப்புக்கள் பெற்று வெளிநாடு செல்வதனை தவிர்க்குமாறு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.