இலங்கை 15 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டியுள்ளதாம்..!
இலங்கை 15 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையல் உள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்த அறிக்கையிலேயே, இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன்கள் பற்றி விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் சீனா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை பெற்றுக் கொண்ட கடன்களே அதிகமாகும்.
1997ம் ஆண்டு தொடக்கம் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 2.96 பில்லியன் டொலர் கடனுக்காக வட்டியுடன் சேர்த்து 4.9 பில்லியன் டொலரை இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ளது.
இதே காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட 3.35 பில்லியன் டொலர் கடனுக்கு, 4.64 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கைங உள்ளது.
சீனாவிடம் பெற்ற கடன்களின் மீளச்செலுத்தும் சராசரி காலம் 12.2 ஆண்டுகளாகும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன்களை மீளச்செலுத்த வேண்டிய சராசரி காலம் 21 ஆண்டுகளாகும்.
இவற்றை விட அமெரிக்கா, இந்தியா, அனைத்துலக நாணய நிதியம், உலகவங்கி, அனைத்துலக ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து இலங்கை பெற்ற கடன்களும் மீளச்செலுத்தப்பட வேண்டியுள்ளது.
எனினும் கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளிடம் இருந்து இலங்கை மிகக்குறைந்தளவு கடன்களையே பெற்றுள்ளது
Post a Comment