சம்ஷியா கலீலின் ஓவியக் கண்காட்சி 14,15,16 ஆம் திகதிகளில்
TN
கலீல் எமது நாட்டின் தேர்ச்சி பெற்ற ஓர் ஓவியர். தனது ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் இன்று கலா பவனத்தில் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்துமளவுக்கு முன்னேறியுள்ளார்.
ஐந்து வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் இதற்குத் தந்தையின் ஊக்குவிப்பு இருந்த போதிலும் தன்னை வேறு துறையில் கற்கும் படி கூறியதால் பாடசாலையில் கற்கும் போது சித்திரத்தை ஒரு பாடமாகக் கற்க முடியவில்லை ஆனால் சித்திரத்தில் ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து பொழுதுபோக்காக வரைந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் சம்ஷியா.
அவரைச் சந்தித்தபோது தனது ஈடுபாடு குறித்து அவர் மேலும் கூறுகையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த நான் தற்போது கொழும்பில் வசிக்கின்றேன். சித்திரக் கலையை முதலில் கலாசூரி ஜயசிறி கமகேயிடம் 1 வருடமும் பின் இலங்கை தேசிய கலா பவனத்தில் 3 வருடங்களுமாகக் கற்கின்றேன். இயற்கைக் காட்சிகளை வரைவதில் எனக்கு மிகுந்த ஆர்வமும் ரசனையும் இருக்கின்றது.
எண்ணெய் வர்ணத்தில் உருவாக்கிய எனது 40இற்கும் மேற்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி “நேர்ச்சர்ஸ் ஒடிசி” என்ற தலைப்பின் கீழ் கொழும்பு 3 நெளும் பொக்குண மாவத்தையிலுள்ள இலங்கை தேசிய கலாபவனத்தில் இம்மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 6மணி வரையும், 15, 16 ஆகிய திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 6மணிவரையும் நடைபெறவுள்ளது.
Post a Comment