Header Ads



ஈராக் குண்டுவெடிப்புகளில் 107 பேர் மரணம் - 214 பேர் காயம்


ஈராக்கில் திங்கட்கிழமை, 18 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில், 107 பேர் பலியாகினர். ஈராக்கின் வடகிழக்கில் உள்ள உதய்ம் என்ற இடத்தில், மூன்று வாகனங்களில் வந்தவாகள், அங்கிருந்த ராணுவ முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தாஜி என்ற இடத்தில், ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் அப்பாவி மக்கள், 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாக்தாத் அருகே உள்ள சதார் நகரில், அரசு கட்டடத்தில் குண்டு வெடித்துள்ளது. கிர்குக் நகரில் ஏழு கார் குண்டுகள் வெடித்துள்ளன. மேற்கண்ட சம்பவங்களில், மொத்தம், 107 பேர் பலியாகியுள்ளனர். 214 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.


1 comment:

  1. சிரியாவின் பக்கமிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப
    இந்தத் தாக்குதல்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.