Header Ads



புலி, நாய் சின்னங்களுக்கு தடை - 1 அல்லது 8 அல்லது 15 ஆம் திகதிகளில் தேர்தல்

இரண்டு இலட்சனைகளை கட்சியின் இலட்சனையாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கமைய நாய் மற்றும் புலி ஆகிய இலட்சனைகள் எந்த கட்சிகளுக்கும் இலட்சினைகளாக பயன்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணையாளர்  இதனை தெரிவித்தார்.

இதனிடையே, தாமரைப்பூ, சிங்கம், அரிவால் போன்றவற்றையும் கட்சியின் இலட்சனையகளாக பயன்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பிலும் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர எதிர்வரும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கருத்து வெளியிட்டார். செப்டம்பர் மாதம் முதலாம், எட்டாம் அல்லது 15 ஆம் திகதிகளின் ஒரு தினத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
 
வேட்பு மனு தாக்கல் செய்யும் கட்சி மற்றும் சுயேச்சை குழு ஆகியவற்றின் எண்ணிக்கைகளை கருத்திற் கொண்டே தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

No comments

Powered by Blogger.