Header Ads



றிசாத் பதியுதீன் VS இராயப்பு ஜோசப்



(கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன் எழுதி, இர்ஷாத் றஹ்மத்துல்லா மூலமாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்)

கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன்

மூன்று தசாப்த கால போர் முடிவுற்று, அமைதி நிலவும் ஒரு நாட்டில், அதன் மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதே பொதுவான எதிர்பார்பாகும். ஆனால் - மார்க்கோ போலோ, இபுனு பதூதா போன்ற உலக சஞ்சாரிகளால் வசீகர பூமியாக வர்ணிக்கப்பட்ட நம் இலங்கையிலோ, நிலைமை தலைகீழாகும். பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றம் போன்றவற்றால், ஒட்டுமொத்த இலங்கையரும் விழி பிதுங்கி வாழும் நிலை ஒருபுறம் என்றால் மறுபுறம் சிறுபான்மை இனங்கள் தத்தம் எதிர்கால இருப்புக்கான உத்தரவாதம் கேள்விக்குறியாகும் ஒரு காலகட்டத்தில், பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி சொல்லொணா துயரங்களை அனுபவித்தவர்களாய் வாழ்ந்து வருவது துரதிஷ்டமே!

வெளிநாட்டு - உள்நாட்டு தீயசக்திகள் தம் சுயலாப அனுகூலங்களுக்காக, விரிக்கும் வலையில் சிக்கும் அப்பாவி சிறுபான்மை மக்களை, தேசிய அரசியற் தலைமைத்துவங்கள் வேறு பந்தாடுகின்றன. பேரினவாதம் தம் அரசியல் லாபத்தை தக்கவைத்து கொள்வதற்காக சில வியூகங்களை - திட்டங்களை வகுத்து, அந்தரங்கமாக சுழியோடுகின்றது. அடி மூடைக்கே பாரம் அதிகம் என்பதுபோல, இதனால் ஏதோ ஒரு வழியில் - ஒரு கோணத்தில் சிறுபான்மை இனங்களே பாதிக்கப்படுகின்றனளூ பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. சிறுபான்மை  சமூகத்து படித்தவர்களும், ஊடகவியலாளர்களும் இதன் சூட்சுமம் புரியாமல், ஊதி பெரிதாக்கி அற்ப சந்தோஷத்திற்கு ஆளாவதுதான் வேதனையோ வேதனை!
மேற்கண்ட கருத்தியலின்படி, இந்நாட்டில் ஒரே மொழியை பேசும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் புதிதாக எதிர்நோக்கும் ஒரு பிரச்சினையே, மன்னார் பேராயர் - அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்து மோதல் ஆகும். இரு சமூகங்களை உருவகப்படுத்தும் இந்த இரு முக்கியத்தர்களும் சொந்த பிரச்சினைக்காக முரண்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் எந்தக் குரோதமும் இவ்விருவரிடையே இல்லவேயில்லை. சமய அடிப்படையிலான எந்த பிரச்சினையும் - மோதலும் இல்லை. அப்படியானால் ஏனிந்த கருத்துமோதல்?

தத்தம் சமூகங்கள் தொடர்பாக எழுந்ததே, இந்த கருத்துமோதல் ஆகும். சமூகம் என வரும்போது, பலதரப்பட்ட சிந்தனை போக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும் பல்வேறு கருத்துக்கள் முரண்பட நேரும் பலரை திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இதனால் அச் சமூகங்களை உருவகப்படுத்தும், அச் சமூகங்களுக்காகப் பேசும் தலைவர்களிடையே கருத்துபேதங்கள் தலை தூக்குவதை தவிர்க்க முடியாது. சிலவேளைகளில் கருத்துபேதங்கள் தலைதூக்குவதை தவிர்க்க முடியாது. சிலவேளைகளில் கருத்துமோதல்கள் பூரண தெளிவைத்தரும்.

நாகரிகம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், எதையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்பது உறுதி செய்யப்பட்ட காலப்பிரிவில், ஒரு பாண்பாட்டுமொழியை தாய்மொழியாகப் பேசக்கூடிய இரு சமூகங்களின் பெரியவர்கள், அழகாக - அருமையாக - அர்த்தபூர்வமாகப் பேசி, பிரச்சினை எழாதவாறு தீர்த்துக்கொள்ள முடியும். 'கனி இருக்க, காய் கவர்ந்தற்று' என்ற வள்ளுவன் மொழியில், வழியும் -வாய்ப்பும் இருக்கும் போது, பேராயர் இராயப்பு ஆண்டகையும்,அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் எதிரும் புதிருமாக - கீரியும் பாம்புமாக மாறியது எப்படி, மாற்றியவர்கள் யார்?

இப்படி இரு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடையறிய முனைந்தால், சில தீயசக்திகள், தீ மூட்டி, ஊதி எரியவிட்டு, அதில் குளிர்காய - அற்ப ஆதாயம் பெற முனைந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகி வருகிறது. அப்பாவி மக்களுக்கு எந்த விடயத்திலும் ஆழ்ந்த அறிவு - அனுபவத் தெளிவு இருக்கப்போவதில்லை. தம் சுயநலத் திட்டங்களுக்கேற்ப, திட்டம் தீட்டி உள்நோக்கோடு செயற்படும் பிரஸ்தாப தீயசக்திகளே விஷயத்தை விவகாரமாக்கி, பூதாகாரமாக்கி, பொதுமக்களை நம்பச் செய்து, அவர்களைத் திசைத்திருப்பி காய் நகர்த்துகின்றார்கள்.

மன்னார் பேராயர் தரப்பில் பேசும் ஓரிரு அரசியல்வாதிகள், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இதுவிடயமாகப் பேசி, 'மன்னார் பேராயர் வடபுலத்து முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு விரோதமாக செயற்படுகின்றார்' எனக் குற்றம் சுமத்தி, ' தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் கௌதம புத்தரே தலைகுனியும் வகையில் மிக மோசமாக நடந்த பிக்குவோடு, நம் மன்னார் பேராயரை ஒப்பிட்டு பேசிவிட்டார்' எனக்கூறி, அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூப்பாடு போடுகின்றனர்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லையே. அதனால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே - நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டார் அமைச்சர்.

'மன்னிப்பு கேட்க வேண்டும்' 'மன்னிப்பு கேட்க மாட்டேன்'  என்ற இரு எதிர்மறையான கருத்துக்களையும் இரு சமூகக் கறைகளிலுமுள்ள படித்தவர்கள் - கல்விமான்கள் - புத்திஜீவிகள் - சமூக இணக்கப்பாடு என விழையும் சமூகப்பிரமுகர்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். மன்னார் பேராயர் இராயப்பு ஆண்டகை எந்த இடத்திலும் தன்னை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவமதித்துப் பேசி விட்டதால், மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரஸ்தாபிக்கவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்தவர்கள் அரசியலில் அற்ப லாபம் காணத்துடிக்கும் தீய சக்திகளே!

இன்னொரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த - பொறுப்பு வாய்ந்த மீள்குடியேற்ற அமைச்சராக முன்னைய அமைச்சரவையில் பதவி வகித்து, தமிழ் - முஸ்லிம் என்ற பேதமின்றி பெருஞ்சேவை புரிந்து, அதனாலேயே தமிழ் மக்களின் மனங்களை வென்று, தமிழ் மக்களும் தம் பிரதிநிதியாகக் கணிசமான வாக்குகளைத் தந்து, அதன் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் அமைச்சராகியிருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எவ்வித ஆதாரமுமின்றி, இன்னொரு சமயப் பெரியாரை விமர்சித்து, தன் செல்வாக்கைத் தானே குறைத்துக்கொள்ள விரும்புவாரா? சிறுபிள்ளைத்தனமாக, பொறுப்பற்று - பாராளுமன்றத்தில் பேசுவாரா? ஆதாரமில்லாமல் ஒரு சமயப் பெருமகனை குறைக்கண்டு குற்றம் சுமத்தி பேசினால், அதனால் தன் செல்வாக்கை அதுவும் வடபுலத்து தமிழர் மத்தியில் தனக்கிருக்கும் பெருஞ் செல்வாக்கை இழக்க விரும்புவாரா? எந்த அரசியல்வாதியும் தன் செல்வாக்கை சரிய விடமாட்டார் என்பதே நடைமுறை உண்மை.

வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் புலிகளால் விரட்டப்பட்டபோது வாய்மூடி மௌனம் சாதித்தவர்கள் இன்று பேச முற்படுகின்றனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பேச்சிலிருந்து புரிந்து கொள்ளும் உண்மை என்ன? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் கொள்ள வேண்டும். அமைச்சர் மனத்தில் எந்தவித கசடோ - காழ்ப்புணர்ச்சியோ இல்லை. ஆதாரபூர்வமாக - துணிவாகவே உண்மையை பேசுகின்றார். ஆதார உண்மைகள் தன்கைவசம் இருப்பதனாலேயே இப்படி துணிந்து பேசுகின்றார்.

அதனால் - மன்னார் பேராயர் மீது பெரும்பழியை அமைச்சர் சுமத்திவிட்டார். அதனால் குடியே மூழ்கிப் போனது என ஒப்பாரி வைக்கும் தீயசக்திகள், அமைச்சர் ஆதார பூர்வமாக சுமத்தும் குற்றச்சாட்டை ஆதார பூர்வமாகவே மறுக்கலாமே! அமைச்சர் கூறும் ஆதாரம் உண்மைக்குப் புறம்பானது என்பதை மாற்று ஆதாரங்களோடு நிரூபிக்கலாமே! இதன் மூலம் யார் குற்றவாளி என்பதை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டலாமே! இப்படி அறிவுபூர்வமான வழிமுறைகளை கையாளாமல், வெறும் பத்திரிகை அறிக்கைகள் மூலம் வாய்ச்சவடால் விடலாமா? இப்படி உண்மையை - யதார்த்த நிலையைத் தொட்டுப் பாராமல் - முன்வைக்காமல் அரசியல் செய்வோர், நாலடைவில் தம் முகவரியைத் தொலைத்துவிட்ட அநாமதேயங்களாக அதே மக்களால் மறக்கப்பட்டு விடுவர். இதனை சமகால வரலாறும் கண்முன்னே நிரூபித்துக் காட்டிவிட்டது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்விஷயத்தை ஜெனீவாவிலோ -வத்திக்கானிலோ நான் சொல்லத் தயார் என்கிறார். இதுவிடயமாகப் பேசுவதற்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்கவில்லை. வெறும் அறிக்கையில் மட்டும் விஷயத்தை அலசாமல், அறிஞர்கள் கூடும் அவையிலும் ஆணித்தரமாகப் பேசுகின்றார்.

இப்படி பகிரங்கமாக - விஷய ஞானத்தோடு பேசும் அமைச்சரை, அவர் வழியில் பேசி மடக்குவதோ - மன்னிப்புக் கேட்க வைப்பது தானே முறை. அதைவிடுத்து, மறை காவலர்களைக் கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதாலோ, மக்களை அணித்திரளச் செய்து சாபம் இடுவதாலோ தெய்வம் தண்டித்து விடுவதில்லை, தெய்வம் எப்போதுமே உண்மையின் பக்கமே என்பது நான்குமறை தீர்ப்பு.

இன்னொரு முக்கிய விடயம் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும். அது என்ன?

நாடு இப்போது போய்க்கொண்டிருக்கும் முறையில், இதுவொரு முற்றும் முழுதுமான பௌத்த நாடு என்பதை தயார்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுபான்மை இனங்களின் வாழ்வியல் தடயங்களை துடைத்தெறியும் முயற்சிகள் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள் தமக்கிடையேயுள்ள சில்லறை பிரச்சினைகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, பல விஷயங்களிலும் ஒற்றுமையுடன் செயல்படுவதே பொது எதிரியை வெற்றிகொள்ள ஒரே வழி. இதை தூரநோக்குடன் சிந்தித்த தந்தை செல்வா முதல் நம் மூத்த தலைவர்கள் எல்லோரும் தமிழ் - முஸ்லிம்களின் ஐக்கியத்தை மிகவும் வலியுறுத்தி போந்தனர். அதனால்தான் இன்றும் தீய சக்திகளுக்கு இரையாகாத நம் தலைவர்கள் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை வற்புறுத்துகின்றனர். இந்த ஒற்றுமை உறவு எந்த வகையிலும் பாதிக்கவோ, பழுதடையவோ இடம் தருவது ஆரோக்கியமல்ல.

'மறப்போம் -மன்னிப்போம்' என்ற மனநிலையில் , கடந்தகால கசப்புணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, பொது எதிரியை வெற்றிகொள்ள முனைவோமாக! தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை என்றும் விரும்பும் நல்லிதய மனிதர்கள் எவரும், இந்த பேராயர் - அமைச்சர் கருத்து முரண்பாட்டை எண்ணி கவலைப்படத் தேவையில்லை ஏனென்றால் -தமிழ் - முஸ்லிம்கள் ஒற்றுமையாகக் கைகோர்த்து செல்லும் வழியில், இது ஒரு சறுக்கல் தானே தவிர, சரிவோ - முறிவோ அல்ல.

சறுக்கல் - சரிக்கட்டக் கூடியது. சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து நடைபயிலலாம்! வாருங்கள் சுதாரித்துக் கொள்வோம்.
 

3 comments:

  1. இன வெறி பிடித்த தமிழ் பத்திரிகைகள் ,இணையங்கள்,அரசியல்வாதிகள் காரணம்.ஆயரும் வாய்திறந்து இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூடசொல்லவில்லையே.எல்லோருக்கும் உலகளவில் தங்களைப்பற்றி பேசவேண்டும் என்ற ஆசை.பலியாவது இனங்களும்,மதங்களும் தான்.
    Meraan

    ReplyDelete
  2. இந்த ஆயர் யார், இவரது பின்னணி என்ன?

    இவர் வெள்ளை ஆடை அணிந்த வாலில்லாத புலி.

    பிரபாகரனின் மகளுக்கு கலியாணம் பேசிய ஒரு புரோக்கர்.

    லண்டனில் ஜனாதிபதி மகிந்தவை எதிர்த்த புலன் பெயர்ந்த (அதாவது புலன்கள் பெயர்ந்த)
    வாலறுந்த புலிக் குஞ்சுகள், அடுத்து குதித்த போராட்டம், மன்னார் ஆயரை பாதுகாக்கும் படி, பாபரசருக்கு பக்ஸ்
    அனுப்பியதாகும். ஆயரால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திட்கு அச்சுறுத்தல் என்னும் நிலையில்,
    புலன் பெயர்ந்த புலிக் குஞ்சுகள் பாப்பரசரை பாதுகாக்க பாடுபோடும் மர்மம் என்ன?

    ஆயரின் புலிப் பல்லின் கோரக் கடியிலிருந்து முஸ்லீம்களைப் பாதுகாக்கத்தான் பாப்பரசருக்கு பக்ஸ் அனுப்ப வேண்டும்,

    ReplyDelete
  3. paththirikaikal nithanamaha seithykalai pirasurithathal ippirachchinayai theerkkalam 600 kirusthavarkalai kolai seitha sankili mannanin varisukaluden otrumaiyaha irukkamudiumentral en muslimkaluden mudiyathu musaliur ashhar

    ReplyDelete

Powered by Blogger.