கொம்பனித்தெரு மக்களை வெளியேற்ற சதி - போராட முஜீபுர் ரஹ்மான் அழைப்பு
அபிவிருத்தி என்ற பெயரால் கொழும்பு கொம்பெனித்தெருவில் வாழும் மக்களை வெளியேற்றி 71/2 ஏக்கர் காணியை அரசாங்கம் பலாத்காரமாக சுவீகரித்துள்ளதாக குற்றம் சாட்டும் ஐ.தே.க வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதற்கெதிராக மக்களை வீதியில் இறக்கி போராடப்போவதாகவும் நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சித்தலைவர்அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மே மாதம் 4 ஆம் மற்றும் 30 ஆம் திகதி ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொம்பனி வீதியில் ஏழரை ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஸ்டேஷன் பெசேஜ்ஜிலும் ஒன்றரை ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இக் காணிகளில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. வியாபார நிலையங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இங்கு காணப்படுகின்றன.
அபிவிருத்தி என்ற பெயரால் காணிகளை சுவீகரித்து இந்தியாவின் டாட்டா நிறுவனத்திற்கு அரசாங்கம் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது. தற்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்ப்பையடுத்து டாட்டா நிறுவனம் இத் திட்டத்தைக் கைவிட்டு விட்டது.
தற்போது யாருக்கு இக்காணிகள் விற்பனை செய்யப்படப்போகின்றன? உடன்படிக்கையின் விபரம் என்ன? என்பது இரகசியமாகவே உள்ளது. இப் பிரதேசத்திலுள்ள தனியார் காணிகளில் சட்ட ரீதியாக உறுதிகளுடன் 150 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்கின்றனர். அவ்வாறு வாழும் மக்களையே பலாத்காரமாக வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இம்மக்களைச் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் 3 வருடங்களில் இப் பிரதேசத்திலேயே வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால் மக்கள் இதனை நம்பத் தயாரில்லை ஏற்கனவே ஸ்டேஷன் வீதியில் 300 வீடுகள் உடைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இன்னும் பலர் அடிப்படை வசதிகளின்றி வெலிகொடை எனும் பிரதேசத்தில் வாழ்கின்றனர்.
அதே போன்று மியூஸ் வீதியில் 21 வீடுகள் உடைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். வாடகை வீடுகளில் இருப்பதற்காக ரூபா 10, 000 வழங்கப்பட்டது. ஒரு சிலருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் 17 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை.
எனவே அரசாங்கத்தின் உறுதிமொழிகளை நம்ப மக்கள் தயாரில்லை. அத்தோடு பரம்பரையாக இந்த பிரதேசங்களில் வாழும் தொழில் புரியும் பாடசாலைகள் செல்லும் சமூக கலை கலாசாரத்துடன் இப் பிரதேசங்களில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது அம் மக்களின் வாழும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
மக்களை பணயம் வைத்து அரசாங்கம் பெறுமதியான காணிகளை இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றது.
இதற்கு இடமளிக்க மாட்டோம். மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கைளை எடுத்து வருகிறோம் என்றார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.ஷரப்தீன் கருத்து தெரிவிக்கையில்,

ஆகஸ்ட் மாத்திற்குள் இம்மக்கள் வெளியேற வேண்டுமென வாய்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம் வாழ்ந்த பிரதேசங்களை விட்டு வெளியேற மக்கள் விரும்பவில்லை. எனவே பலாத்காரமாக வெளியேற்றுவதை எதிர்க்கிறோம் என்றார்.
Post a Comment