Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து ஒதுங்கிறதா..? அமைச்சருக்கு வந்த சந்தேகம்

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனா பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஹஸன் அலியை சந்தித்தார். கிழக்கின் அரசியல் நிலைப்பற்றி இருவரும் கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து ஒதுங்கப் போகின்றதா என அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா ஹஸன் அலியிடம் கேள்வியெழுப்பினார்.

எமது மக்களது தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகிறார்கள். காணிப் பிரச்சினை, பள்ளிவாசல்கள் தாக்கப்படும் பிரச்சினை எனப் பலப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாது தொடர்கின்றன.

இந்நிலையில் மக்கள் நலனுக்கே முஸ்லிம் காங்கிரஸ் முக்கியத்துவம்' கொடுக்கவேண்டும் என்று ஹஸன் அலி இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் தினேஷ், உங்கள் மக்களே உங்களுக்கு முக்கியமானது. அந்த நிலைப்பாட்டை எடுப்பது சரிதானே என்று கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.