முறைப்பாடு செய்யச்சென்ற பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இலங்கை தூதரக அதிகாரி
சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக ஊழியர் ஒருவர் இலங்கைப் பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணின் சகோதரியால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா குறிப்பிட்டார்.
ஆனமடுவை பகுதியிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ள பெண்ணொருவரே துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
தாம் பணிபுரியும் இடத்தில் எதிர்நோக்கிய சிரமங்கள் குறித்து முறைபாடு செய்வதற்கான தூதரகத்தை நாடிய சந்தர்ப்பத்தில் கடந்த 7ஆம் திகதி இந்த பணிப்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சவூதியுள்ள இலங்கைத் தூதரக உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்காரவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
Post a Comment