Header Ads



இலவச உணவு கேட்டு அடாவடியில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்

AD

பேராதனையில் உள்ள அரச விடுதி ஒன்றுக்குள் நுழைந்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 10 லட்சம் ரூபா சொத்து சேதம் ஏற்பட்டுள்ளாதாக விடுதியின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் நேற்று செவ்வாய்கிழமை இரவு குறித்த விடுதிக்குச் சென்று மது அருந்திவிட்டு இலவசமாக உணவு தருமாறு கோரியுள்ளனர். அதற்கு விடுதி சேவையாளர்கள் மறுப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது விடுதிக்கும் மாணவர்கள் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த விடுதி சேவையாளர் ஒருவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விடுதி நிர்வாகியால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. பல்கலைக் கழகங்கள் தனியார் மயப் படுத்தப் பட வேண்டும்.

    பொது மக்களின் பணத்தில் அரசு ரவடிகளை உற்பத்தி செய்வதா?

    ReplyDelete
  2. இதில் தான் ஆரம்பிக்கிரது முதல் கிக் யாரை யார் காதலிப்பது என்று அதன் பின் படித்த காவாலிகள் எதை புதிதாக இளம் மாணவர்களுக்கு போதிக்கப்போகிரார்கள் இதனால்தான் பாடசாலைகளில் சிறார் துஸ்பிரயோகம்

    ReplyDelete

Powered by Blogger.