பெரும் அச்சுறுத்தல் இந்தியாதான் - பாகிஸ்தானியர்கள் கருத்து
தலிபான், அல்காய்தாகளைவிட இந்தியாதான் தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர்.
ஐந்தில் ஒரு பாகிஸ்தானியர் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள போதிலும் பத்தில் ஆறு பேர் இந்தியாவை பெரும் அச்சுறுத்தலாக கருதுகின்றனர்.
இந்தியாவை அச்சுறுத்தலாக கருதினாலும், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவது அவசியம் என 62 சதவீத பாகிஸ்தானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருதரப்பு வர்த்தக உறவுகளுக்கும், பேச்சுவார்த்தைக்கும் மூன்றில் இரண்டு பங்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அப்போதுதான் இருநாடுகளிடையேயான பதற்றம் குறையும் என அவர்கள் கூறினர். பியு ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
Post a Comment