''வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்'' - கொழும்பில் இன்று கருத்தரங்கு
வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயும் நோக்குடன் கொழும்பில் இன்று சனிக்கிழமை விஷேட முழுநாள் கருத்தரங்கு ஒன்று ஏறபாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக குறிப்பிட்டார்.
1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் வடக்கு முஸ்லிம்கள் எத்தகைய கட்டமைப்புகளுடன் வாழ்ந்தார்களோ அதனை மீள ஏற்படுத்துவது குறித்து ஆராயப்படுமெனவும், இதுகுறித்து ஓரளவு விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது வடக்கு முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட முக்கிய விவகாரம் என்பதால் எந்தவித அரசியல் வேறுபாடுகளும் இன்றி இந்நிகழ்வில் பங்குகொள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் எனவும், இந்த முழுநாள் கருத்தரங்கு வடமாகாண முஸ்லிம்களுக்கு முக்கியத்துவமிக்கதாக அமையுமெனவும் அமைச்சர் றிசாத் மேலும் தெரிவித்தார்.
Post a Comment