Header Ads



ஹஜ் விவகாரம் - முஸ்லிம் அமைச்சர்களிடையே முறுகல்


நவமணி
இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ்ஜுக்கு செல்லுபவர்களிடமீருந்து பதிவுக் கட்டணம் அறவிடுவது தொடர்பில் அமைச்சர் பௌஸி மற்றும் பிரதிமைச்சர் அப்துல் காதர் ஆகியோருக்கிடையில் பகிரங்க முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறை ஹஜ் ஏற்பாடுகளில் ஊழல் மோசடிகள் காணப்படுவதாகவும், ஹாஜிகளிடமீருந்து பதிவுக் கட்டணம் அறிவிடுவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர்  ஆகியோருக்கு இதுகுறித்து முறையிடப்படுமெனவும் பிரதிமைச்சர் காதர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது புனித கவ்பத்துல்லாவை கழுவி சுத்தம் செய்யும் பணியில் இலங்கை பிரதிநிதியாக பங்கேற்றுள்ள அமைச்சர் பௌஸி பிரதியமைச்சர் காதரின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் பௌஸி மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், பிரதமரும்தான் என்னை ஹஜ்ஜுக்கு பொறுப்பான அமைச்சராக நியமித்துள்ளார். அமைச்சரவையில் உள்ள மூத்த முஸ்லிம் அமைச்சரும் நான்தான். ஹாஜிகளின் நலக் கருதிதான் 25.000 ரூபாவை கட்டணமாக அறவிட்டோம். இந்தப் பணம் மீள் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. Ore kuttaiyila uurina mattaihal than rendum

    ReplyDelete

Powered by Blogger.