Header Ads



இலங்கை பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்கிறது - பிரேஸிலில் மஹிந்த

உலகம் வெப்பமயமாவதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரேஸிலில் நடைபெறுகின்ற ' ரியோ-20 'மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் வெப்பமடைகின்றமை, தீவுகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாடுகளினால் சுற்றாடல் பாதிக்கப்படும் அதேவேளை அதன் விளைவுகளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனுபவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

மூன்று தசாப்த காலமாக நடைபெற்றுவந்த பயங்கரவாதச் செயற்பாடுகளை இல்லாதொழித்து, இலங்கை தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனதுரையில் தெரிவித்துள்ளார்

2 comments:

  1. பொருளாதார அபிவிருத்தி என்றால் பண வீக்கமா?
    Meraan

    ReplyDelete
  2. சாப்பிடுவதற்கே மக்கள் திண்டாடுகிறார்கள்.

    பொருளாதார அபிவிருத்தி?

    வாய்ச் சவடாலுக்கு மட்டும் குறைச்சலில்லை.

    ReplyDelete

Powered by Blogger.