Header Ads



வெளிநாடுகளில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களின் கவனத்திற்கு..!

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை வாக்காளர்களாக "பி.சி' படிவங்கள் ஊடாகப் பதிவுசெய்ய முடியும். கடந்த ஆண்டைப் போன்று விஷேட விண்ணப்பப் படிவங்கள் எவையும் வெளியிடப்படமாட்டாது என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து இடம்பெற்று வருகின்றது. கிராம சேவையாளர்கள் ஊடாக "பி.சி' படிவங்கள் தற்போது வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்பினால் "பி.சி' படிவத்தினூடாகவே பதிவுசெய்ய முடியும். இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டின் பிரதியை சமர்ப்பித்தால் மாத்திரமே பதிவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்.

பதிவுசெய்ய விண்ணப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்படின் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இடம்பெறும் மீளாய்வுக் காலத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

இதேவேளை, கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வாழும் 219 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.