சீனாவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் - முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்தார்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
சீனாவுக்கும் இலங்கைக்குமான இருதரப்பு வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளளும் வகையில் இலங்கையின் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் சீனா சென்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை சீனாவின் காய் வாய் பிளாசா உணவகத்தில் ஆரம்பமான வர்த்தக மாநாட்டிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.சீனாவின் பலம் வாய்ந்த மாகாணத்தில் மு்ககியமான யூனான் பிரதேசத்தின் பிரதி ஆளுநர் கூ சவொக்ஸி தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமானது.
அதே வேளை அமைச்சர் றிசாத் பதியுதீன் சினாவின் குன்விங் பிரதேசத்தில் இடம் பெறும் 7 வது சீனா தெற்காசிய வர்த்தகம் அமைப்பினதும் தெற்காசிய நாடுகளின் வர்த்தக கண்காட்சி நிகழ்விலும் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்குமான இரு தரப்பு வர்த்தக கொடுக்கள் வாங்கல் தொடர்பில் இலங்கை வர்த்தக அமைச்சின் புள்ளிவிபரங்களின் படி 2011 ஆண்டில் 2239.43 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டுள்ளது.அதே வேளை கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை சீனாவுடன் நிலையான ஏற்றுமதி தன்மையினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே வேளை அமைச்சர் றிசாத் பதியுதீன்,யூனான் ஆளுநரிடத்தில் மேலும் கருத்துரைக்கையில் இலங்கையின் 2020 ஆம் ஆண்டின் பொருளாதார இலக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றம் பெறுவதே,அதற்கான அடித்தளத்தை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திவருவதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இலங்கை இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களுக்கான அதிகரித்த கேள்வி சீனாவில் உள்ளதாகவும் அதற்கான நிரந்தர காட்சிக் கூடங்கள் ஏற்படு்தப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் வர்த்தக துறை அமைச்சர் என்ற வகையில் முன்வைப்பதாக கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,அதற்கு பதிலளித்த பிரதி மாகாண ஆளுநர் இலங்கை அமைச்சரின் இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் நிரந்தரமான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களுக்கான காட்சியறை ஒன்றை ஏற்படுத்த தேவையான நடவடிக்கையெடுக்கப்படுவதாகவும் ஆளுநர் பதில் அளித்தார்.
Post a Comment